search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்.. மன்னிப்பு கேட்ட பாபர் அசாம்
    X

    டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்.. மன்னிப்பு கேட்ட பாபர் அசாம்

    • கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
    • பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் நாளையுடன் முடியவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் வெளியேறியுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது. டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறத் தவறியதற்காக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களை ஆதரித்ததற்கு மிக்க நன்றி. இந்த மோசமான விளையாட்டுக்காக மன்னிக்கவும். இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவியது. ஆனால் ஒட்டுமொத்தமாக எங்கள் பேட்டிங் கிளிக் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சில தவறுகளை செய்தோம்.

    எப்போதுமே ஒரு அணி தோற்கும் போதும் வெற்றி பெறும் போதும் அணியாகதான் விளையாடுகிறோம். ஆனால் தோல்வி பெறும்போது மட்டும் கேப்டனை கை காட்டுகிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது. அணியில் உள்ள 11 பேரும் ஒன்றாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும். எனவே அணி தோற்கும்போது கேப்டன் ஒருவரை மட்டுமே கைகாட்டுவது தவறு

    இவ்வாறு பாபர் அசாம் கூறினார்.

    Next Story
    ×