search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன் பட்டம் மலையின் உச்சி போன்றது: ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்
    X

    சாம்பியன் பட்டம் "மலையின் உச்சி" போன்றது: ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்

    • விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடியை பிரித்தது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது.
    • இருவரும் அரைசதம் அடித்த உடனே விரைவாக ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    கடைசியில் எங்களது சிறந்ததை கைப்பற்றியுள்ளோம். முக்கியமான போட்டிகளில் வீரர்கள் வீறுகொண்டு எழுந்து, சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார்கள். இந்த தொடர் முழுவதும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக செயல்பட்டோம். இன்று நாங்கள், சேஸிங் செய்வது சிறந்ததாக இருக்கும் என நினைத்தோம். இது எங்களுக்கு சற்று எளிதாக இருக்கும் என நினைத்தோம். எல்லோரும் இதில் ஆர்வமாக இருந்தனர்.

    நான் நினைத்ததை விட ஆடுகளம் கூடுதல் ஸ்லோ ஆக இருந்தது. குறிப்பாக பந்து சுழலவில்லை. அதற்கு ஏற்றவாறு தங்களை சரிசெய்து கொண்டு, பந்து வீச்சாளர்கள் சரியான லைனில் பந்தை பிட்ச் செய்தார்கள்.

    தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நாங்கள் பீல்டிங்கில் சொதப்பினோம். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் வயதான வீரர்களை பெற்றுள்ளோம். இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தங்களை பணியை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டனர்.

    300 ரன்களுக்கு கீழ் என்பது 240-ஆக அமைந்தது. 300 ரன்கள் கடினமாக இருக்கும் என நினைத்தேன். இருந்தாலும், இந்த ஆடுகளம் அதையும் சேஸிங் செய்யக்கூடிய அளவில்தான் இருந்தது. 240-ல் இந்தியாவை கட்டுப்படுத்திய மிகவும் மகிழ்ச்சி. லபுஷேன் பொறுமையாக விளையாடினார். டிராவிஸ் ஹெட் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    தைரியமாக ஆட்டத்தை எடுத்துச் சென்று, பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து, மிகப்பெரிய போட்டியில் தனது கேரக்டரை வெளிப்படுத்தினார். அவர் காயம் அடைந்தபோது, தேர்வாளர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இந்த வெற்றி நீண்ட நாட்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். இந்த சீசனில் ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளோம். அதில் இது மிகவும் உயர்ந்தது. மலையின் உச்சிப்பகுதி.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×