search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஹிட்மேனின் அதிரடி அணுகுமுறை அணிக்கு நன்றாக கைக்கொடுக்கிறது: பேட்டிங் பயிற்சியாளர் சொல்கிறார்
    X

    ஹிட்மேனின் அதிரடி அணுகுமுறை அணிக்கு நன்றாக கைக்கொடுக்கிறது: பேட்டிங் பயிற்சியாளர் சொல்கிறார்

    • பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் ரோகித் இதுபோன்று அதிரடியில் இறங்குகிறார்
    • ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடி விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யருக்கு உதவியாக இருக்கிறது

    உலகக் கோப்பையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 83 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் குவித்தது. அதன்பின் இந்தியா 40 ஓவரில் 232 ரன்கள் சேர்த்தது. பந்து பழசு ஆகஆக ரன்கள் குவிக்க சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 326 ரன்கள் அடிக்க ரோகித் சர்மாவின் அதிரடிதான் முக்கிய காரணம்.

    ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அணுகுமுறை (attacking batting approach) அணிக்கு சிறந்த வகையில் உதவியாக இருக்கிறது என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விக்ரம் ரத்தோர் கூறுகையில் "இது முற்றிலும் ரோகித் சர்மாவின் யோசனைதான். அவர் இந்த முன்முயற்சியை எடுத்துள்ளார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று சிரமமாக இருக்கும்போது, இதுபோன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பார்க்கிறார். இது அணிக்கு சிறந்த முறையில் பலன் அளித்து வருகிறது. அவர் மட்டும்தான் இதில் முன்னிலை வகிக்கிறார்.

    முடிந்தவரை அதிக ரன்கள் குவிக்க பார்க்கிறோம். ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிக ரன்கள் குவித்தால் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் களத்தில் நங்கூரமாக நிற்பதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ள அது வழிவகுக்கும்.

    Next Story
    ×