search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியா அறிவித்த டி20 உலகக் கோப்பை அணி: ரோகித் சர்மா கேப்டன் இல்லை
    X

    ஆஸ்திரேலியா அறிவித்த டி20 உலகக் கோப்பை அணி: ரோகித் சர்மா கேப்டன் இல்லை

    • ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ்க்கு அணியில் இடம் கொடுத்துள்ளது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

    இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 20 அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியை வெளியிட்டுள்ளது.

    இதில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு தங்கள் அணிகளை அழைத்துச் சென்ற ரோகித் சர்மா மற்றும் மார்கிராம் ஆகியோரை கேப்டனாக தேர்வு செய்யவில்லை.

    முதன்முறையாக அரையிறுதிக்கு அணியை அழைத்துச் சென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கானை கேப்டனாக நியமித்துள்ளது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ள டி20 உலகக் கோப்பை அணி:-

    1. ரோகித் சர்மா, 2. டிராவிஸ் ஹெட், 3. நிக்கோலஸ் பூரன், 4. ஆரோன் ஜோன்ஸ், 5. மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ரஷித் கான் (கேப்டன்), 8. ரிஷாத் ஹொசைன், 9. நோர்ஜே, 10, பும்ரா, 11. பரூக்கி.

    இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில இருந்து இருவர் இடம் பிடித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் (நிக்கோலஸ் பூரன்) , அமெரிக்கா (ஆரோன் ஜோன்ஸ்), வங்காளதேசம் (ரிஷாத் ஹொசைன்), தென்ஆப்பிரிக்கா (நோர்ஜே), ஆப்கானிஸ்தான் (ரஷித் கான், பரூக்கி) அணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    Next Story
    ×