என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
எனது சிறந்த ஆட்டத்திற்கு ரோகித்-தான் காரணம்: தவான் நெகிழ்ச்சி
- ரோகித்துடன் நான் இணைந்து விளையாடிய போது மறுமுனையில் இருந்து அவர் எனக்கு பல ஆதரவை கொடுத்திருக்கிறார்.
- ரோகித் கொடுத்த ஆதரவால் தான் நான் நல்ல தொடக்கத்தை அணிக்காக கொடுத்திருக்கிறேன்.
மும்பை :
இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் இணைந்து பல நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள்.இந்த ஜோடி 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 5148 ரன்கள் இணைந்து குவித்துள்ளனர். இந்த நிலையில் ஷிகர் தவான், தன்னுடைய இடத்தை அணியில் இருந்து இழந்தார். அவருக்கு பின் கில் நன்றாக விளையாடினாலும் இன்னும் டி20, டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் ஷிகர் தவானுக்கு மாற்று வீரனை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் தமது வெற்றிக்கு ரோகித் சர்மா பங்கு இருப்பதாக ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது:-
ரோகித்துடன் நான் இணைந்து விளையாடிய போது மறுமுனையில் இருந்து அவர் எனக்கு பல ஆதரவை கொடுத்திருக்கிறார். ரோகித் கொடுத்த ஆதரவால் தான் நான் நல்ல தொடக்கத்தை அணிக்காக கொடுத்திருக்கிறேன். பெரிய ஸ்கோரை சேஸ் செய்வதிலும் சரி பெரிய ஸ்கோர் எடுப்பதிலும் சரி நாங்கள் அடித்தளம் நன்றாக அமைத்தோம்.
அதற்கு காரணம் ரோகித்தின் ஆதரவு தான். என்னுடைய பல சிறந்த செயல்பாடுகளுக்கு ரோகித்தின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்காது. இதற்காக ரோகித்துக்கு அந்த பாராட்டுகளை கூற நான் கடமைப்பட்டு இருக்கிறேன். நானும் ரோகித்தும் இணைந்து பல இன்னிங்ஸ் வரை ஆடியிருக்கிறோம்.
அதில் குறிப்பாக மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது ஒருநாள் போட்டியில் நாங்கள் இருவரும் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது எங்களுடைய சிறந்த ஆட்டமாக நான் பார்க்கிறேன். இரண்டாவது சிறந்த ஆட்டம் என்றால் 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் நானும் ரோகித் சர்மாவும் இணைந்து 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது சிறந்த இன்னிங்ஸ்தான்.
என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
தற்போது தவான் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு அதன் அணிக்கு வெற்றியை பெற்று தர போராடுவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்