search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வான்கடே மைதானத்தில் ரிலாக்ஸ் ஆக இருக்க முடியாது: ரோகித் சர்மா
    X

    வான்கடே மைதானத்தில் "ரிலாக்ஸ்" ஆக இருக்க முடியாது: ரோகித் சர்மா

    • 398 ரன் இலக்கை நியூசிலாந்து எட்டி விடுமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு நிலவியது.
    • டேரில் மிட்செல்- வில்லியம்சன் ஜோடி அச்சுறுத்தும் வகையில் விளையாடியது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    398 ரன் இலக்கை நோக்கி நியூசிலாந்து பயணித்தபோது, கேன் வில்லியம்சன் (69)- டேரில் மிட்செல் (134) ஜோடி சிறப்பாக விளையாடியது. அப்போது இந்தியாவுக்கு சற்று நெருக்கடி இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால், முகமது சமி சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட் சாய்த்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    வெற்றி பெற்றபின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளேன். இங்கே நீங்கள் "ரிலாக்ஸ்" ஆக இருக்க முடியாது. முடிந்த வரை எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டும். எங்கள் மீது நெருக்கடி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். பீல்டிங் சற்று சொதப்பிய நிலையில், நாங்கள் பொறுமையாக இருந்தோம். இதுபோன்ற விசயம் விளையாட்டில் நடக்கத்தான் செய்யும. இருந்தபோதிலும், நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

    ரன்ரேட் 9-க்கு மேல் இருக்கும்போது, வாய்ப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். நாங்கள் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை. டேரில் மிட்செல், வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.

    நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. ரசிகர்களும் அமைதியான நிலைக்கு சென்றார்கள். இது போட்டியில் நடக்கக் கூடியதுதான். ஆனால் போட்டியை எங்கள் பக்கம் திருப்புவோம் என்ற எங்களுக்கு தெரியும். நாங்கள் அனைத்து வகையிலும் முயிற்சித்தோம். முகமது சமி அபாரமாக செயல்பட்டார். நியூசிலாந்து அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் வீழ்த்தினார். இந்த தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    கில் தொடக்கத்தில் அபாரமாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக அவரால் மீண்டும் களம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. கோலி வழக்கம்போல் அவரது ஆட்டத்தை வெளிப்படுத்தினா். அனைத்து வீரர்களின் பேட்டிங் சூப்பர். நாங்கள் முன்னோக்கி செல்ல விரும்பும் டெம்ப்லேட் இதுதான்.

    இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் 230 ரன்கள்தான் இலக்கு நிர்ணயம் செய்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன். 9 போட்டிகளில் என்ன செய்தமோ, அதை செய்ய விரும்பினோம். அவை சிறப்பாக அமைந்தது." என்றார்.

    Next Story
    ×