search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சம்பளம் குறைப்பு, ஒப்பந்தம் குறித்து ஆய்வு... சிக்கலை சந்திக்க இருக்கும் பாகிஸ்தான் வீரர்கள்
    X

    சம்பளம் குறைப்பு, ஒப்பந்தம் குறித்து ஆய்வு... சிக்கலை சந்திக்க இருக்கும் பாகிஸ்தான் வீரர்கள்

    • அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது மிகப்பெரிய பாதிப்பாக அமைந்தது.
    • இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. குரூப் "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, நமீபியா அணிகள் இடம் பிடித்திருந்தன.

    பாகிஸ்தான்- அமெரிக்கா இடையிலான போட்டி "டை"யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.

    இதனால் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.

    வீரர்களுக்கான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில தலைவர்கள், முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஹ்சின் நக்வி-க்கு ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி தோல்விக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார், வீரர்கள் அவர்களுக்கான மத்திய ஒப்பந்த மறுஆய்வு, சம்பளம், போட்டிக்கான கட்டணம் குறைவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் அணிக்குள் மூன்று பிரிவுகள் உள்ளன. மூத்த வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, தலைவருடன் கடுமையான நடவடிக்கைக்கான ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வருடம் வீரர்களுக்கான சம்பளம் குறிப்பிடத்தகுந்த வகையில் உயர்த்தப்பட்டது. அதேபோல் ஐசிசி-யிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கு வீரர்களுக்கு சென்றடைய முடிவு எடுக்கப்பட்டது.

    உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றால் ஒவ்வொரு வீரர்களுக்கும் போனஸாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என நக்வி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக பதவி ஏற்ற பிறகு, வீரர்களை ஒன்றிணைக்கும் சவால் அவர் முன் இருந்தது. ஆனால், வீரர்களிடையே குரூப் உருவானதால் அவரால் அதை திறம்பட செய்ய முடியாமல் போனது.

    பாபர் அசாம் தலைமையில் ஒரு குரூப், ஷாஹீன் அப்ரிடி தலைமையில் ஒரு குரூப், முகமது ரிஸ்வான் தலைமையில் ஒரு குரூப் என அணியில் மூன்று குரூப் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை இழந்தபோது அப்செட் ஆனார். அந்த நேரத்தில் பாபர் அசாம் அவருக்கு உதவவில்லை. ரிஸ்வான் தனது பெயர் கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்யப்படாததால் அதிருப்தி அடைந்தார்.

    Next Story
    ×