search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 4 வெற்றி: இந்தியாவின் 2-வது கேப்டன்- கில் சாதனை
    X

    வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 4 வெற்றி: இந்தியாவின் 2-வது கேப்டன்- கில் சாதனை

    • டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை சுப்மன் கில் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முடித்தது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். வெளிநாடுகளில் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.

    முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 2019-2020-ல் நியூசிலாந்தில் நடந்த டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    Next Story
    ×