search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லக்னோ - ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்
    X

    லக்னோ - ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்

    • பவர்பிளேயில் 2-வது முறையாக ஐதராபாத் அணி 100 ரன்கள் குவித்துள்ளது.
    • இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சில சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக கேஎல் ராகுல் டி20 போட்டிகளில் 7500 ரன்கள் குவித்துள்ளார். அபிஷேக் சர்மா இன்று தனது 100-வது டி20 போட்டியில் விளையாடினார்.

    அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2022-ம் ஆண்டு 1062 சிக்சர்களும், 2023-ம் ஆண்டு 1124 சிக்சர்களும் அடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிரடியாக விளையாடிய ஹெட் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேக அரைசதம் விளாசி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், இந்த சீசனில் 2-வது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    பவர்பிளேயில் 2-வது முறையாக ஐதராபாத் அணி 100 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 107/0 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×