search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக்கோப்பை: வரலாறு படைத்த அகீல் ஹொசைன்
    X

    டி20 உலகக்கோப்பை: வரலாறு படைத்த அகீல் ஹொசைன்

    • வெஸ்ட் இண்டீஸ் அணியானது 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தியது.
    • இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைக் குவித்தது.

    இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தது. இதன் காரணமாக உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியதன் மூலம், டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை தனதாக்கியுள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எந்த ஒரு வீரரும் டி20 உலகக்கோப்பை தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றாதது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×