என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை 2024: முதல் போட்டியில் விராட் கோலி பங்கேற்பது சந்தேகம்
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.
- இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்டனர்.
நியூயார்க்:
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.
இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், விராட் கோலி நேற்று இரவுதான் நியூயார்க் புறப்பட்டார். இதனால் அவர் பங்கேற்பது கடினம் என தெரிய வந்துள்ளது. ஆனால் ஜூன் 5-ம் தேதி நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.