search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 234 ரன்னில் ஆல் அவுட்
    X

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 234 ரன்னில் ஆல் அவுட்

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாஸ் 70 பந்துகளில் 53 ரன்னில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்தது.

    வங்காளதேச அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வங்களாதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம்-ஹசன் ஜாய் களமிறங்கினர். ஹசன் ஜாய் 31 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய வந்த தமிம் 9 பவுண்டரிகளுடன் 46 ரன்னில் வெளியேறினா. அடுத்ததாக சண்டோ 26 ரன்னிலும் அன்முல் 23 ரன்னிலும் வெளியேறினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாஸ் 70 பந்துகளில் 53 ரன்னில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். கேப்டன் சகீப் 8, நுரல் ஹசன் 7, மெஹிதி ஹசன் 9, ஷோரிஃபுல் இஸ்லாம் 26, காலீத் அகமது 1 ரன்னில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். எபடோட் ஹொசைன் 21 ரன்னில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்தது.

    Next Story
    ×