என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
- ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
- இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி முடிவடைகிறது. கடைசி டெஸ்ட் மார்ச் 9-ந் தேதி தொடங்கி 13-ல் முடிவடைகிறது.
அதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.
ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஷ், லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா