என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்னில் ஆல் அவுட்
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழந்து 315 ரன்கள் எடுத்தது.
- ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் களமிறங்கினர் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
பொறுப்புடன் ஆடிய பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரை சதமடித்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழந்து 315 ரன்கள் எடுத்தது. 2-வது நாளான இன்று மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 378 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசிம் ஷா, யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பாகிஸ்தான் அணி 65 ரன்னில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆடி வருகிறது.