search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இலங்கை அணி
    X

    பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இலங்கை அணி

    • இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 360 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி செல்வா சதம் அடித்து அசத்தினார்.

    காலே:

    பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.

    3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 88.1 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 147 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய முடிவில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் திமுத் கருணாரத்னே 27 ரன்னுடனும், தனஞ்செயா டி சில்வா 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி செல்வா சதம் அடித்து அசத்தினார். கருணாரத்னே அரை சதம் எடுத்து அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 360 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 508 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    Next Story
    ×