search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரோகித் வெளியேறிய நிலையில் பொறுப்புடன் பேட்டிங் செய்தது மகிழ்ச்சி- சூர்யகுமார் யாதவ்
    X

    ரோகித் வெளியேறிய நிலையில் பொறுப்புடன் பேட்டிங் செய்தது மகிழ்ச்சி- சூர்யகுமார் யாதவ்

    • வெறும் 26 பந்துகளில் அரைசதத்தை எட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
    • ரோகித் இல்லாத சமயத்தில் போட்டியை கடைசி வரை ஒருவர் எடுத்துச்சென்று வெற்றி பெற்று கொடுப்பது மிகவும் முக்கியமாகும்.

    வெஸ்ட் இண்டீஸ்-இந்திய அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

    அதைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 19 ஓவரிலேயே 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை சேர்த்தார். 8 பவுண்டரி 4 சிக்சர்களை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் 76 (44) ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

    வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    வெறும் 26 பந்துகளில் அரைசதத்தை எட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக ரோகித் சர்மா போன்ற முக்கியமான வீரர் ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பியதும் 15 -17 ஓவர்கள் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமானதாகும்.

    இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடந்தது என்பதை இரண்டாவது டி20 போட்டியில் பார்த்தோம். எனவே இப்போட்டியை கடைசி வரை ஒருவர் எடுத்துச்சென்று வெற்றி பெற்று கொடுப்பது மிகவும் முக்கியமாகும். அதில்தான் நான் கவனம் செலுத்தினேன். அந்த தருணங்களில் எனக்கு நானே நம்பிக்கையை கொடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×