search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பெண்கள் ஆசிய கோப்பை: 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    பெண்கள் ஆசிய கோப்பை: 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் அரை சதம் அடித்த நிதா தார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இந்திய அணியை சேர்ந்த ரிச்சா கோஷ் 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.

    சில்கெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீராங்கனைகள் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகப்பட்சமாக ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்சர்கள் அடங்கும்.

    19.4 ஓவர் வரை விளையாடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் அரை சதம் அடித்த நிதா தார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Next Story
    ×