என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி.என்.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்
- மதுரை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
- திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
நெல்லை:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந் தேதி தொடங்கி யது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
கோவை, திண்டுக்கல், சேலம் ஆகிய இடங்களில் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நேற்று முதல் டி.என். பி.எல் போட்டிகள் நெல்லையில் தொடங்கியது. நேற்றைய ஆட்டங்களில் சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்னில் திருப்பூர் தமிழன்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சையயும் தோற்கடித்தன.
இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளன. கோவை கிக்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றைய போட்டிகள் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். இதற்கான போட்டியில் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.
திருச்சி அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று வெளியேறின.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மதுரை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கோவையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
கோவை அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. மதுரையை வீழ்த்தி 12 புள்ளியுடன் தொடர்ந்து முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.
இரவு 7.15 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும். திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்