search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரெய்னா மட்டும் இல்லையென்றால்... 15 ஆண்டு ரகசியத்தை உடைத்த கோலி
    X

    ரெய்னா மட்டும் இல்லையென்றால்... 15 ஆண்டு ரகசியத்தை உடைத்த கோலி

    • வலையில் நான் பேட்டிங் செய்ததை பார்த்து ரெய்னா, பயிற்சியாளரிடம் இவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று கேட்டார்.
    • அணியில் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் வலியுறுத்தினார்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். இவர் விளையாடும் விதம் இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கிரிக்கெட்டிற்கான ஷாட்ஸ்களை மட்டுமே விளையாடுவார். கவர் திசையில் இவர் ஆடும் டிரைவ் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

    இவர் இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்கு அப்போதைய தேர்வாளரான இருந்த திலீப் வெங்சர்கார்தான் காரணம் என்பதை விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

    ஆனால் திலிப் வெங்சர்கார் பார்வையில் தென்படுவதற்கு சுரேஷ் ரெய்னாதான் முக்கிய காரணம். இவரால்தான் நான் தேசிய அணியில் இடம்பிடித்து தொடர்ந்து விளையாட காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

    ஜியோசினிமாவிற்கு விராட் கோலி அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விராட் கோலி கூறியதாவது:-

    அந்த வருடம் 2008 என நினைக்கிறேன். இது இந்திய அணி போட்டி. ஆஸ்திரேலியாவில் எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரில் நாங்கள் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனென்றால், இதில் சிறப்பாக விளையாடினால் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்க முடியும். இதனால் எங்களை போன்ற இளம் வீரர்களுக்கு அது முக்கியமான தொடராக அமைந்தது.

    ஆகவே, ரெய்னா என்னைப் பற்றி கேள்வி பட்டிருக்கலாம் என்பது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

    அவர் தொடரின் பாதியில்தான் அணிக்கு வந்தார். முதலில் பத்ரிநாத் கேப்டனாக இருந்தார். ரெய்னா வந்ததும் அவரிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. பிரவீன் ஆம்ரே பயிற்சியாளராக இருந்தார். அவர் என்னை ஆடும் லெவனில் சேர்க்காமல் வெளியில் வைத்திருந்தார்.

    வலைப்பயிற்சியில் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த ரெய்னா ஆம்ரேவிடம், என்னை ஏன் விளையாட வைக்கவில்லை என்று கேட்டார். ரகானே தொடக்க வீரராக விளையாடுகிறார். நான் மிடில் ஆர்டரில் களம் இறக்கப்பட்டேன்.

    அணியில் என்னை இறக்குவற்கான இடம் இல்லை என்றார்.

    அப்போது ரெய்னா நான் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆகவே, பிரவீன் ஆம்ரே எனக்கு போன் செய்து, தொடக்க வீரராக களம் இறங்க சம்மதமா? எனக் கேட்டார்.

    விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தால், எந்த வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வேன் என நான் கூறினேன். ஆகவே, நியூசிலாந்து அணிக்கு எதிராக நான் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டேன். திலீப் வெங்சர்கார் அந்த நேரம் தேர்வாளராக இருந்தார். நான் நியூசிலாந்துக்கு எதிராக 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன். எனக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் அப்போதே முடிவு செய்திருக்கலாம்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

    அதே ஆண்டில் விராட் கோலி இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

    Next Story
    ×