search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஹாட்ரிக் விக்கெட் எடுக்க நினைத்து பல்பு வாங்கிய சிராஜ்.. சிரிப்பலையில் கில்- கோலி.. வீடியோ
    X

    ஹாட்ரிக் விக்கெட் எடுக்க நினைத்து பல்பு வாங்கிய சிராஜ்.. சிரிப்பலையில் கில்- கோலி.. வீடியோ

    • இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
    • இலங்கை அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை முகமது சிராஜ் வீசிய அதிரடியான ஸ்விங் பந்துகளை கணிக்க முடியாமல் வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனை படைத்தது.

    இப்போட்டியில் 4-வது ஓவரை வீசிய முகமது சிராஜ் முதல் பந்தில் நிசங்காவை அவுட்டாக்கி 3, 4 ஆகிய பந்துகளில் முறையே சமரவிக்ரமா மற்றும் அசலங்கா ஆகியோரையும் அவுட்டாக்கினார். அதனால் ஹாட்ரிக் எடுப்பதற்கு வாய்ப்பை பெற்றார். அதனால் அவரே பீல்டிங்கை தெர்வு செய்தார்.

    மிட் ஆன் திசையில் யாருமே பில்டிங் விடவில்லை. சிலிப்பில் 4 பேர் நின்றனர். ஹாட்ரிக் வாய்ப்புக்கான பந்தை சிறப்பாக வீசியும் டீ சில்வா மிட் ஆன் திசையில் பவுண்டரி அடித்தார். இருப்பினும் அதை பவுண்டரிக்கு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வேகமாக ஓடி துரத்திய முகமது சிராஜ் முடிந்தளவுக்கு போராடியும் தடுக்க முடியவில்லை. அதை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வாய் மீது கை வைத்து சிரித்தார்கள். குறிப்பாக ஏற்கனவே 8/4 என இலங்கை சரிந்தும் அந்த பவுண்டரி போனால் போகட்டும் என்று விடாமல் வெறித்தனமாக சிராஜ் துரத்தியதை நினைத்து விராட் கோலி வெளிப்படையாகவே சிரித்தார்.

    இருப்பினும் தம்முடைய ஓவரில் ஒரு ரன் கூட எக்ஸ்ட்ரா கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வேகமாக துரத்திய சிராஜ் நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்றார். அத்துடன் அடுத்த பந்திலேயே டீ சில்வாவை அவுட்டாக்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்து அதிவேகமாக 5 விக்கெட்டுகள் (16 பந்துகளில்) எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×