search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டாஸ் ஜெயித்த பின் ரோகித் சர்மா செய்த காரியத்தால் சிரிப்பலை: வைரலாகும் வீடியோ
    X

    டாஸ் ஜெயித்த பின் ரோகித் சர்மா செய்த காரியத்தால் சிரிப்பலை: வைரலாகும் வீடியோ

    • இந்த மைதானத்தில் இதுதான் முதல் சர்வதேச போட்டி ஆகும்.
    • நாங்களும் பௌலிங் தான் தேர்வு செய்திருந்தோம் என நியூசிலாந்து கேப்டன் கூறினார்.

    நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தில் இதுதான் முதல் சர்வதேச போட்டி ஆகும். இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்யவா, பீல்டிங் தேர்வு செய்யவா என்று கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு யோசித்துள்ளார். அதன் பிறகு சிரித்துக் கொண்டே பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    நியூசிலாந்து கேப்டனும் அவர்களுக்கு பின்னாடி பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய வீரர்களும் சிரிப்படி இந்த சம்பவத்தை பார்த்தக் கொண்டிருந்தனர்.


    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில், நாங்களும் பௌலிங் தான் தேர்வு செய்தோம். இது தான் முதல் சர்வதேச போட்டி என்பதால், விக்கெட் எப்படி விழும் என்பது குறித்து தெரியாது. கடந்த போட்டி சிறப்பாக இருந்தது. கடந்த போட்டியைப் போன்று இந்தப் போட்டியிலும் பேட்டிங் இருக்கும் என்று நம்புகிறேன். நாங்களும் அதே அணியுடன் தான் களமிறங்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

    நியூசிலாந்து: பின் ஆலென், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டெரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி சிப்லே, லக்கி பெர்குசன், பிளைர் டக்னர்.

    Next Story
    ×