search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு - வெஸ்ட் இண்டீஸ் அணி நிதான ஆட்டம்
    X

    பொறுப்புடன் ஆடிய பிராத்வெயிட், சந்தர்பால்

    மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு - வெஸ்ட் இண்டீஸ் அணி நிதான ஆட்டம்

    • முதல் நாளில் மழை குறுக்கிட்டதால் வெஸ்ட் இண்டீஸ் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர்.

    புலவாயோ:

    வெஸ்ட்இண்டீஸ் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கேப்டன் பிராத்வெயிட், சந்தர்பால் களமிறங்கினர்.

    இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 51 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 112 ரன்களைச் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. பிராத்வெயிட், சந்தர்பால் ஆகியோர் தலா 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவடைந்தது.

    Next Story
    ×