என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கீமர் ரோச் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் - முதல் டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் வெஸ்ட் இண்டீஸ்
- வங்காளதேசம் அணி 2வது விக்கெட்டில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் 2வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிராத்வெயிட் 94 ரன்னும், பிளாக்வுட் 63 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், எபாட் ஹுசைன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. கேப்டன் ஷகிப் அல் ஹசன், விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். நுருல் ஹசன் 64 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 63 ரன்னும் எடுத்தனர். மஹ்மதுல் ஹசன் ஜாய் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வங்காளதேச வீரர் காலித் அகமது சிறப்பாக பந்து வீசினார். முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஜான் கேம்ப்பெல், பிளாக்வுட் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்