search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம்- 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 351 ரன்கள் குவிப்பு
    X

    பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம்- 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 351 ரன்கள் குவிப்பு

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    அணியின் எண்ணிக்கை 143 ஆக இருந்தபோது இஷான் கிஷன் 73 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்டினார். 41 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்தது.

    தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின் அசத்தலாக ஆடியது.

    5வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது. பாண்ட்யா சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×