என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பெண்கள் டி20 பேட்டிங், பவுலிங் தரவரிசை: டாப் 10-ல் 4 இந்திய வீராங்கனைகள்
- பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
- பந்து வீச்சாளர் தரவரிசையிலும் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 5-வது இடத்தில் தொடருகிறார்.
இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 2 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென், இந்தியாவின் தீப்தி ஷர்மா மாற்றமின்றி நீடிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 10-வது இடமும், ராதா யாதவ் 15-வது இடமும் , பூஜா வஸ்ட்ராகர் 23-வது இடமும் , ஸ்ரேயங்கா பட்டீல் 60-வது இடமும் வகிக்கிறார்கள்.