search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலகக் கோப்பை 2023: இந்திய வெற்றியை பறித்த Umpires Call விதிமுறை.. நெட்டிசன்கள் குமுறல்
    X

    உலகக் கோப்பை 2023: இந்திய வெற்றியை பறித்த "Umpires Call" விதிமுறை.. நெட்டிசன்கள் குமுறல்

    • உலகக் கோப்பையை 6-வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா.
    • ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்று அசத்தியது. இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 240 ரன்களை மட்டுமே குவித்தது.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை துரத்தியது. துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தணறிய ஆஸ்திரேலியா அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    22.1 ஓவரில் 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 28-வது ஓவரின் 5-வது பந்தை பும்ரா வீசினார். லபுஷேன் எதிர்கொண்ட இந்த பந்து, அவரின் பேட்-ஐ தாக்கியது. விக்கெட் கிடைத்த உற்சாகத்தில் பும்ரா மற்றும் இந்திய வீரர்கள் விக்கெட் கேட்டு அம்பயரிடம் முறையிட்டனர். எனினும், அவர் செவி கொடுக்காமல் விக்கெட்டை மறுத்தார்.

    உடனே இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார். மூன்றாவது நடுவர், இந்த பந்தை ரி-பிளே செய்து பார்த்தார். அதில் பந்து லபுஷேன் பேட்-இல் படாமல், நேரடியாக அவரது பேட்-இல் பட்டது தெளிவாக உறுதி செய்யப்பட்டது. மேலும் பந்து ஸ்டம்ப்களையும் பதம் பார்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாம் நடுவர் களத்தில் இருந்த அம்பயரின் முடிவே இறுதியானது என்பதை தெரிவிக்கும் வகையில் "அம்பயர்ஸ் கால்" என்ற தீர்ப்பை வழங்கினார்.

    போட்டியின் இந்த சூழலில் இந்திய அணி விக்கெட்டை வீழ்த்த போராடி வந்த நிலையில், அம்பயர்ஸ் கால் முடிவால் விக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. இதன் பிறகு வேகம்பிடித்த லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில், போட்டியில் இந்திய அணி தோல்விக்கு "அம்பயர்ஸ் கால்" முடிவும் முக்கிய காரணம் என கூறி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×