என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார்.
- பாபா மதங்களைக் கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்.
ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா.
ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார்.
தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார்.
பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார்.
பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார்.
பாபா மதங்களைக் கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்.
மக்கள் அவரை சாய் மஹராஜ் என்று போற்றி கொண்டாடினார். பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை)வும் ஸபூரி (பொறுமை)யும் ஆகும்.
தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் ஊதி (விபூதி)யையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா.
வாழ்வில் பொறுமையும், தன்மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார்.
- ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக்கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார்.
- பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா.
பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று சீரடியில் வாழ்ந்து வந்தார்.
பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார்.
தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது.
பல ஞானிகள் வந்து பாபாவைச் சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினார்
பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர்.
ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர். பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார்.
இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்கினர்.
ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக்கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார்.
பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா.
தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார். சிரிக்கச் சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார்.
பாபா பஜனை யையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும் படி உற்சாகமூட்டினார். சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார்.
- இதைக் கேட்ட குரு “இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
- அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர். பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார்.
அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான். இதைக் கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து, அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள்.
இதைக் கேட்ட குரு இவ்வாறு சொன்னார் "இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார். அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர். பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார்.
கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாகக் கிடந்தவன் மேல் தூவினார். என்னே அதிசயம்! இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான். எழுந்தவன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.
கோபால் ராவ்தேஷ்முக் ஸ்ரீவெங்கடேசப் பெருமானை வேண்டி, தாம் முன்பே கூறியதுபோல தவயோகம் செய்தார்.
தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்குத் திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார். தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா சீரடி கிராமத்தை அடைந்தார்.
- இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார்.
- குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது.
ஒரு சமயம் குருவும் சீடனும் தனிமையில் இருக்கும்போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான்.
அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது.
தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அந்தக் கொடியவன் அத்தோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான்.
இதைக்கண்ட கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி, பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார்.
அந்தக் கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.
"என்னால் தானே உங்களுக்குத் தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள்" என்று குருவிடம் பாபா கேட்டார்.
இதைக் கேட்ட குரு மிகவும் மனம் கலங்கினார்.
அப்போது, "பாபா மனம் வருத்தப்படாதே! உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது. நானோ விரைவில் இந்தப் பூமியை விட்டு நீங்கிச் செல்லப்போகிறவன்.
அதனால் இறையருளால் எனக்குக் கிடைத்த சகல வரங்களையும் சக்திகளையும் உனக்கு தாரை வார்த்துத் தரப்போகிறேன்" என்று கூறினார்.
அவர் அதோடு நிற்காமல், உடனே அதை நிறைவேற்றும் பொருட்டு, அருகே இருந்த பசுவிடம் பாலைக் கறந்து வரும்படி கூறினார்.
குருவின் கட்டளையைக் கேட்ட பாபா, பசுவிடம் பாலைக் கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனைக் கேட்டார்.
"ஐயா, இப்பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை. ஆனபடியால் இது பால் கறக்காது" என்று சொன்னான் பசுவுக்குச் சொந்தக்காரன்.
இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார்.
குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது.
பாபா பாலைக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். பாலைப் பெற்றுக் கொண்ட குரு, "இன்று முதல், இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன்" என்று கூறி பாபாவிடம் பாலைக் கொடுத்தார்.
- பாபா ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட கோபால்ராவ் தேஷ்முக் தீவிர ஏழுமலையான் பக்தர்.
- அதனால் பாபாவிற்கு குரு அருளுடன் வெங்கடேசப் பெருமானின் அருளும் கிடைத்தது.
சிறுவயதில் பாபாவை முகம்மதியப் பெரியவர் ஒருவர் வளர்த்து வந்தார்.
அந்தப் பெரியவர் பாபா மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார்.
பாபாவை விட்டுச் சிறிது நேரம் கூட பிரிந்து இருக்க மாட்டார். அப்படியிருந்த அவர் ஒருநாள் திடீரென்று இறந்து விட்டார்.
ஆதரவு இல்லாத நிலையில் இருந்த பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்துச் சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து, இச்சிறுவனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்றார்.
கோபால்ராவ் தேஷ்முக் திருப்பதி வெங்கடாசலபதி மீது தீவிர பக்தி கொண்டவர். மக்கள், இவரை மகா ஞானியாகவே கருதி போற்றி வந்தனர்.
குழந்தையான பாபாவைப் பார்த்த ஞானி கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு, சாட்சாத் வெங்கடாசலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
பாபாவைத் தனது மகனைப் போலவே கருதி வளர்த்து வந்தார். பாபாவும் கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார்.
பாபா ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட கோபால்ராவ் தேஷ்முக் தீவிர ஏழுமலையான் பக்தர்.
அதனால் பாபாவிற்கு குரு அருளுடன் வெங்கடேசப் பெருமானின் அருளும் கிடைத்தது.
குருவும் சீடனும் மிகவும் அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் பேரும் புகழுடனும் இருந்து வந்தது அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை.
அதனால் பொறாமை கொண்டனர்.
- பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்பு சுவை மாறியது.
- சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள்.
சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்றபோது, பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார்.
பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மகால்சாபதி என்னும் பூசாரி, அவரை சாயி என்று அழைத்தார்.
சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள். பாபா என்பது இந்தியில் "அப்பா" என்று பொருள்.
இரண்டும் இணைந்து "சாய்பாபா" என்ற திருப்பெயரே நிலைத்துவிட்டது.
சாய்பாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். சீரடியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார்.
பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்பு சுவை மாறியது.
சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் "நானே அல்லா! நானே சங்கரன்! நானே ஸ்ரீகிருஷ்ணன்! நானே அனுமன்!" என்று கூறினார்.
ஆமாம்! அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்!
சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு யோகியைப் போல் வாழ்ந்தார் பாபா.
அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்கள் "அவர் ஒரு மகான்" என்று போற்றினார்கள்.
- பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது.
- மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார்.
சீரடிபாபாவின் தாய், தந்தை யார்? சொந்த ஊர் எது? இயற்பெயர் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை.
பாபா 1854 ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு வருகை புரிந்தார்.
ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை.
சில ஆண்டுகன் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார்.
பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது.
பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார்.
பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார்.
சாந்த் பட்டேல், பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார்.
- புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விழும்.
- சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள மூலவர் மீது புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மூலவர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
அதேபோல் இன்று காலை 6.30 மணி அளவில் சூரிய ஒளிக்கதிர் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- பெருமாளை வழிபடுவதற்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது.
- பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை 15 நாட்களும் மகாளய பட்சம்.
எல்லா நாட்களிலும் நாம் இறைவனை வழிபடுவோம் என்றாலும், இறைவனை வழிபடுவதற்காகவே நம் முன்னோர்கள், சில மாதங்களை வரையறை செய்து வைத்துள்ளனர். அதில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகியவை அடங்கும். இதில் பெருமாளை வழிபடுவதற்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது.
பெருமாள் மட்டுமின்றி, அம்பாளுக்குரிய நவராத்திரி விரத நாட்களும், புரட்டாசி மாதம் தான் வருகிறது. அதோடு முன்னோர்களை வழிபடும் 'மகாளய அமாவாசை', சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக இந்த புரட்டாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் சில விரதங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
விநாயகர் விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர 'துர்வாஷ்டமி விரதம் என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது.
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
மகாலட்சுமி விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
அமுக்தாபரண விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமாமகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடு) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.
ஜேஷ்டா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் 'மூதேவி' என்றும் அழைப்பார்கள்.
சஷ்டி-லலிதா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்து கடை பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.
கபிலா சஷ்டி விரதம்
புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.
மகாளய பட்சம்
புரட்டாசி பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மகாளய பட்சம் ஆகும். இந்த காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியம். இதுநாள் வரை முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் கூட, இந்த மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால், முழு பலனையும் பெற முடியும்.
- இன்று மகாளய பட்சம் ஆரம்பம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-2 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பவுர்ணமி காலை 9.10 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: பூரட்டாதி நண்பகல் 12.58 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று மகாளய பட்சம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் அன்னை ஸ்ரீ காந்திமதியம்மன் அபிஷேகம், அலங்காரம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-திறமை
ரிஷபம்-சுகம்
மிதுனம்-சாதனை
கடகம்-செலவு
சிம்மம்-பொறுமை
கன்னி-பெருமை
துலாம்- உதவி
விருச்சிகம்-அமைதி
தனுசு- நலம்
மகரம்-சலனம்
கும்பம்-ஆதாயம்
மீனம்-பயணம்
- சீரடி தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
- கோவிலுக்குள் சாயிபஜன் நடந்து கொண்டே இருக்கும் கோவில் முழுக்க ஒலிக்கிற மாதிரி ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் உள்ளன.
01. சீரடியில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. வேண்டுதல்கள் வைத்திருப்பவர்கள் இந்த இரு நாட்களில் செல்லலாம்.
02. சீரடியில் ஏராளமான ஆட்டோக்கள் உள்ளன. பெரும்பாலும் யாரும் பக்தர்களை ஏமாற்றுவதில்லை.
03. சீரடி தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
04. முன்பெல்லாம் சீரடிக்கு வட இந்திய மக்கள் தான் அதிகம் வந்து சென்றனர். தற்போது தென் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் சீரடிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
05. சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.
06. பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாலு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். அவரவர் அதிருஷ்டம் எந்த வரிசையில் அமைகிறது என்பது. உள்பக்க வரிசையில் செல்வது நல்லது. கடைசி வரிசையில் அமைத்து முன்னால் போய் விட்டால் பாபாவை பார்ப்பது சிரமமாக இருக்கும்.
07. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை, பஜன், ஆரத்தி எல்லாம் ஆகிறது. அது வரை நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான். க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும்.
08. விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை.
09. ரூ.200 செலுத்தி பாஸ் பெற்ற பக்தர்களுக்கு சிறப்பு தரிசனமும் உண்டு. ஐ.எ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற முக்கிய அதிகாரிகளின் கடிதம் இருந்தால் ஏதோ ஒரு வழியாக அனுமதிக்கிறார்கள். அப்படி இருந்தாலும் கடைசியில் சன்னிதானத்துக்குள் போகும் போது எல்லாம் ஒன்றாகத்தான் போக வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு தனி வழி உண்டு. ஆனால் அதற்கு அவரவர் ஆதார் அட்டையை காட்டி கவுண்டரில் பெற்ற பாஸ் தேவை.
10. சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம்.
11. உண்மையில் பாபா கோவிலுக்குள் பக்தர்கள் கொண்டு வந்து தரும் எதையுமே ஏற்பதில்லை. நம்மிடமே திருப்பித் தந்து விடுகிறார்கள். ஆகவே பக்த ஜனங்களே வெறும் கையோடும் மனம் நிறைய பிரார்த்தனைகளை சாய்பாபா சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக்கொண்டால் போதும்.
12. வெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைக்கும் படி அறிக்கை பலகை கேட்டுக் கொள்கிறது. இதுவும் அவரவர் விருப்பம் தான். கட்டாயமில்லை. ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள்.
13. வாமன் தாத்யா என்ற சாயி பக்தர் தினமும் இரண்டு சூளையிலிடப்படாத பானைகளைக் கொடுப்பார். பாபா தம்முடைய கைகளாலேயே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.
14. "சாய்" என்ற சொல்லுக்கு, "சாட்சாத் கடவுள்" என்ற அர்த்தமாம்.
15. பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர்.
16. சாய்பாபா கோவிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கி இருக்காங்க. முதல்ல கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் ஐந்து நுழைவாசல்கள் இருக்குது.
17. கேமரா, செல்போன்களுக்கு கோவிலில் அனுமதி கிடையாது. அங்கேயே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு, நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க.
18. மேடையில் சமாதியின் பின்புறம், இத்தாலியன் மார்பிலான பாபாவின் சிலை அழகான தங்கக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம். இந்த சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது. தூண்கள் அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே தங்கம் தகதகன்னு மின்னுது.
19. பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவின் சமாதிக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாகக தருகிறார்கள். பாபா சிலைக்கு கோவில் சார்பில் அணிவிக்கின்ற ஒரு மாலையை தவிர வேறு அணிவிப்பது கிடையாது.
20. கோவிலுக்குள்ள சாயிபஜன் நடந்து கொண்டே இருக்கும். அது கோவில் முழுக்க ஒலிக்கிற மாதிரி ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.
- ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஐந்து ஏழைகளுக்கு (குறைந்தது) உணவு அளிக்க வேண்டும்.
- நேரடியாக உணவு வழங்க இயலாதவர்கள் யார் மூலமாகவாவது பணமாகவோ, உணவாகவோ கொடுத்து வழங்கலாம்.
இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஜாதி, மத வித்தியாசமின்றி எல்லோரும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.
ஒன்பது வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால், நிச்சயமாக அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.
எந்த ஒரு வியாழக்கிழமையிலும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.
நாம் எந்தக் காரியத்தை நினைத்து ஆரம்பித்தாலும் தூய மனதோடு சாயி நாமத்தை உச்சரித்து தொடங்கலாம்.
ஒரு தூய்மையான பலகை அல்லது இருக்கையில் மஞ்சள் துணி விரித்து அதன் மேல் சாயிபாபா படத்தை வைக்க வேண்டும்.
படத்தை வைப்பதற்கு முன்னால் தூய நீரால், துணியால் படத்தைத் துடைத்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.
மஞ்சள் நிற மலர்களை அணிவிக்க வேண்டும். ஊதுபத்தியும், சாம்பிராணி தூபமும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்க வேண்டும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும்.
பழங்கள், கற்கண்டு, இனிப்புகள் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். காலை அல்லது மாலை அல்லது இருவேளையிலும் செய்யலாம்.
நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் பட்டினியுடன் இந்த விரதத்தைச் செய்யவே கூடாது. (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொள்ளலாம்) காலை அல்லது மதியமோ அல்லது இரவோ பழ, திரவ ஆகாரம் ஒரு வேளை சாப்பிட வேண்டும்.
ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தவர்கள் சாயிபாபா கோவிலுக்குச் சென்று வணங்கலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபா படத்தை வைத்து பூஜையை பக்தியுடன் செய்யலாம்.
வெளியூர் போக நேர்ந்தாலும் கூட நிறுத்தாமல் இந்த விரதத்தைச் செய்யலாம்.
பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்னபிற காரணங்களால் விரதம் இருக்க இயலவில்லை என்றால், அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து ஒன்பது வியாழக்கிழமைகள் நிறைவு செய்யலாம்.
ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஐந்து ஏழைகளுக்கு (குறைந்தது) உணவு அளிக்க வேண்டும்.
நேரடியாக உணவு வழங்க இயலாதவர்கள் யார் மூலமாகவாவது பணமாகவோ, உணவாகவோ கொடுத்து வழங்கலாம்.
சாயி பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக, நமது வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்தம் பந்தம், தெரிந்தவர் என்று இயன்ற அளவு சாயிபாபா விரத புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும்.
ஒன்பதாவது வியாழக்கிழமை வழங்கும் புத்தகங்களை பூஜையில் வைத்து வழங்கலாம். இப்படிச் செய்வதால் புத்தகத்தைப் பெறும் பக்தர்களின் விருப்பங்களும் ஈடேறும்.
இந்த விதமாக விதிமுறைகளின்படி விரதமும் விரத நிறைவும் செய்தால் உறுதியாக எண்ணிய காரியம் ஈடேறும். இது சாயிபாபா அருளிச் சென்ற நம்பிக்கை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்