search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • பிறகு நாளுக்கு நாள் அதிக பைசாவாக உயர்ந்தது. பிறகு ரூபாய் கணக்கில் பெற ஆரம்பித்தார்.
    • இவ்வாறு தாம் பெறும் காணிக்கையை அவ்வப்பொழுதே மற்றவர்க்கு தந்துவிட்டு மீண்டும் காசின்றியே இருப்பது சாயிபாபாவின் வழக்கம்.

    சீரடி சாயிபாபா வாழ்ந்த காலம் 1840 முதல் 1918 வரையில் என்று கூறுவதுண்டு.

    இன்று ஒரு குறிப்பிட்ட நிலை வரையில் பணத்திற்கு மதிப்பு மிகவும் குறைவு.

    ஆனால், அந்தக் காலத்தில் அரையணா, ஓரணா காசுகள் இருந்து உள்ளது.

    ஒரு மனிதனுடைய சம்பளம் 15 ரூபாய் முதல் பதவிக்கு தக்கவாறு சம்பளம் இருந்துள்ளது.

    முதல் முதலில் சாயிபாபா யாரிடமும் காணிக்கையை பெறாமல் இருந்தார்.

    ஒரு முறை காசிநாத் என்ற பக்தர் பணக்கொடை கொடுக்க, பாபா அதை ஏற்க மறுத்தார்.

    இப்படி அவர் மறுத்ததைப் பார்த்த காசிநாத் கண்ணீர் வடித்துத் துயருற்றார். அந்தக் காட்சியை கண்டு பொறுக்காத சாயிபாபா தட்சிணை பெற ஆரம்பித்தார்.

    முதலில் இரண்டு பைசா மட்டுமே ஏற்றார்.

    பிறகு நாளுக்கு நாள் அதிக பைசாவாக உயர்ந்தது. பிறகு ரூபாய் கணக்கில் பெற ஆரம்பித்தார்.

    இவ்வாறு தாம் பெறும் காணிக்கையை அவ்வப்பொழுதே மற்றவர்க்கு தந்துவிட்டு மீண்டும் காசின்றியே இருப்பது சாயிபாபாவின் வழக்கம்.

    ஒரு நாள் சீரடிபாபா, தபோல்கரிடம் ''நீ, ஷாமாவிடம் சென்று பதினைந்து ரூபாய் தட்சிணையாகப் பெற்றுக் கொண்டு வா'' என்று கூறி அனுப்பினார்.

    தபோல்கர், ஷாமா வின் இல்லத்திற்குச் சென்று சாயிபாபா தம்மை அனுப்பியதன் காரணத்தைக் கூறினார்.

    ஷாமாவோ பரம ஏழை. அதனால் அவர் ''நான் பரம ஏழை என்பது சாயிராமுக்கு தெரியும், என்னால் பதினைந்து ரூபாயை எவ்வாறு தர முடியும்? பதினைந்து ரூபாய்க்குப் பதிலாக பதினைந்து நமஸ்காரங்களைத் தருகிறேன் என்று அவரிடம் கூறுக'' என்று கூறி அனுப்பினார்.

    தபோல்கர் சாயிபாபாவிடம் சென்ற பொழுது சாயிபாபா ''ஷாமா காணிக்கையாக எதைக் கொடுத் தாலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறி அவரை அழைத்து வா'' என்று கூறினார்.

    தபோல்கர் ஷாமாவிடம் சென்று ''சாயி நீங்கள் எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளுவதாக கூறி உங்களை அழைத்து வரும்படி கூறினார்'' என்று கூற, தபோல்கருடன் ஷாமா மசூதிக்கு வந்து பலரும் கூடியிருந்த நேரத்தில் பதினைந்து முறை நமஸ்காரம் செய்தார்.

    ஷாமா பதினைந்து நமஸ்காரங்களை அன்புடன் காணிக்கையாக சாயிபாபாவுக்கு சமர்ப்பணம் செய்ய, அவரும் அன்புடன் அதை ஏற்றுக் கொண்டார்.

    • தட்சணை கொடுப்பவர்கள் யார்? எதிர்காலத்தில் நல்ல அறுவடை செய்யப் போகிறவர்கள்.
    • என்னுடைய பக்கிரிக்குப் (குருவுக்கு) பலர் கடன் பட்டிருக்கிறார்கள்.

    பக்தர்களிடம் பாபா தட்சணை வாங்குவது ஒரு காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    அதற்கு பாபா பம்பாய் பக்தர்களிடம் விளக்கம் அளித்தார்.

    "நான் யாரிடமாவது ஒரு ரூபாய் தட்சணை வாங்குகிறேன் என்றால் அவருக்குப் பத்து மடங்காக நான் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவன் என்று பொருள்.

    நான் எதனையும் இலவசமாகப் பெறுவதில்லை. அதற்குரிய விலையைக் கொடுத்து விடுகிறேன்.

    நான் எல்லோரிடமும் தட்சணை வாங்குவதில்லை. என்னை ஆளும் பக்கிரி தான் (குரு) யாரிடம் தட்சணை பெற வேண்டும் என்று எனக்கு கட்டளையிடுகிறார். அவர்களிடம் மட்டுமே தட்சணை பெறுகிறேன்.

    தட்சணை கொடுப்பவர்கள் யார்? எதிர்காலத்தில் நல்ல அறுவடை செய்யப் போகிறவர்கள்.

    என்னுடைய பக்கிரிக்குப் (குருவுக்கு) பலர் கடன் பட்டிருக்கிறார்கள்.

    அவர்கள் யார் என்று எனக்கு அடையாளம் தெரியும்.

    அவர்கள் என்னைத் தேடிவரும் போது அவர்களிடமிருந்து எனது பக்கிரியின் கடனை தட்சணையாக வசூலிக்கிறேன்.

    நானும் ஏற்கனவே கொடுத்ததை தட்சணையாகக் கேட்கிறேன்.

    அதனால் தான் தருகிறார்கள். அந்த தட்சணையை சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்துவதைப் பாவமாகக் கருதுகிறேன். அந்த தட்சணை தர்மத்தின் வழி செல்ல வேண்டும்.

    இவ்வாறு தட்சணையின் மகத்துவத்தை பாபா பாமனுக்கும் புரியும் வண்ணம் விளக்கினார்.

    அதன் பின்னர் விதண்டாவாதக்காரர்கள் வாயடைத்துப் போயினர்.

    • மஹல்சாபதி பாபாவின் சீடராவார்.
    • தாஸ்கணு மகாராஜ் என்பவரும் குறிப்பிடத்தக்க சீடராவார்.

    பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்

    1. மஹல்சாபதி,

    2. தாஸ்கணு மகாராஜ்,

    3. நாராயண கோவிந்த சந்தோர்க்கர்,

    4. ஹரிசீதாராம் தீட்சித்,

    5. ஸ்ரீ உபசானி பாபா,

    6. கபர்தே,

    7. அன்னாசாகேப் தபோல்கர்

    ஆகியோராவார்கள்.

    • பாபா பயன்படுத்திய எல்லாப் பொருட்களுமே முக்கியத்துவம் பெற்றுவிட்டன.
    • அவைகளை ஆண்டவனின் காணிக்கைகளாக மக்கள் கருதுகின்றனர்.

    பாபா பயன்படுத்திய எல்லாப் பொருட்களுமே முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

    அவைகளை ஆண்டவனின் காணிக்கைகளாக மக்கள் கருதுகின்றனர்.

    தமது வயலில் விளைந்த கோதுமையில் ஒரு மூட்டையை பாலாஜி படேல் நிவாஸ்கர் என்ற பக்தர் பாபாவிற்கு தருவார்.

    அதன் நினைவாக ஆண்டுதோறும் புதிதாக ஒரு மூட்டை கோதுமை வாங்குகிறார்கள்.

    அதனைக்கண்ணாடி பீரோவில் வைக்கிறார்கள்.

    கோலம்பா என்று ஒரு மண் பானை பாபா பிச்சை எடுத்து வந்த உணவை அதில்தான் போட்டு வைத்தார்.

    அட்சயபாத்திரமாக விளங்கிய அந்த மண்பானையும் சீரடியில் இப்போதும் இருக்கிறது.

    • ஆகவே பாபாவை வழிபட்டால் எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
    • எல்லா சமயங்களையும் ஏற்றுக் கொண்ட பலன் கிடைக்கும். மத, இன, மொழி வேறுபாடுகள் நீங்கும்.

    சர்வ சக்தி படைத்த பாபாவின் போதனைகள் மட்டுமே காலத்தை வென்ற இந்த உலக மகா சக்தியான அன்பு உணர்வினை நமக்கு என்றென்றும் ஊட்ட வல்லவையாகும்.

    ராமராக, கிருஷ்னராக, புத்தராக, ஏசுவாக, அல்லாவாக இப்படி பல்வேறு அவதாரங்களாக பகவான் இருக்கிறார் என்பது நமது அடிப்படை நம்பிக்கை.

    இந்தப்பல்வேறு வடிவங்களின் மொத்த உருவமே பாபா.

    ஆகவே பாபாவை வழிபட்டால் எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    எல்லா சமயங்களையும் ஏற்றுக் கொண்ட பலன் கிடைக்கும். மத, இன, மொழி வேறுபாடுகள் நீங்கும்.

    பாபா ஒருவரே அனைவரின் பிரார்த்தனைகளையும் தங்குதடையின்றி நிறைவேற்றி வைக்கிறார்.

    பக்தர்களின் பாவங்களைப் போக்கி நன்னெறிப்படுத்துகிறார்.

    மனித உள்ளங்களில் ஏற்படும் இவ்வுலக வாழ்க்கை ஆசைகளான செல்வச்செழிப்பு, நோய் நீக்கம், வேலை வாய்ப்பு, குழந்தை நலம் போன்ற மனித வாழ்வின் அன்றாடத்தேவைகளை அருள்பாலித்து வழங்கி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வியாழக்கிழமை களும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும்.
    • முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி, சிரத்தையுடன் செய்யவும்.

    1. பாபாவை குருவாக ஏற்று வழிபட தொடங்கிய பிறகு, குரு (வியாழன்) என்பதால் வியாழக்கிழமை விரதம் இருப்பது வழக்கத்துக்கு வந்தது. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    2. இந்த விரதத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.

    3. இந்த விரதம் அற்புத பலன்கள் தர வல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

    4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை யானாலும், சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    5. காலை அல்லது மாலையில் சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன்மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்கவும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும், நைவேத்தியம் வைத்து (பழங்கள், இனிப்பு, கற்கண்டு எதுவானாலும்) பிரசாதத்தை விநியோகிக்கவும்.

    6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.

    7. 9 வியாழக்கிழமை களும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி, சிரத்தையுடன் செய்யவும்.

    8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைப்பிடிக்கலாம்.

    9. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.

    • அடுத்த வாரம் வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு நடந்த பூஜையின்போதும் ரோஜா மலர்கள் நிறம் மாறிய அதிசயம் நடந்தது.
    • சாய்பாபா சிலை மற்றும் சாய்பாபா உருவப்படத்தின் அருகே வைக்கப்பட்ட ரோஜா மலர்கள் நிறம் மாறி பக்தர்களை பரவசப்படுத்தியது.

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் கூடை தூக்கி பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ணா கோவில் உள்ளது. இங்கு சாய்பாபாவுக்கு தனி சன்னதி உள்ளது.

    இங்கு உள்ள சாய்பாபாவுக்கு வியாழக்கிழமைதோறும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    இதில் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு ரோஜா மலர்களை தூவி சாய்பாபாவை வழிபடுவார்கள்.

    கடந்த மாதம் இங்கு உள்ள சாய்பாபாவுக்கு மலர்கள் தூவி பக்தர்கள் வழிபட்டபோது ரோஜா மலர்கள் நிறம் மாறியது.

    சிவப்பு நிற ரோஜா மலர்கள் பூஜைக்கு பிறகு ஊதா, இளம்மஞ்சள் மற்றும் ரோஸ் நிறத்தில் மாறியது. இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    அடுத்த வாரம் வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு நடந்த பூஜையின்போதும் ரோஜா மலர்கள் நிறம் மாறிய அதிசயம் நடந்தது.

    சாய்பாபா சிலை மற்றும் சாய்பாபா உருவப்படத்தின் அருகே வைக்கப்பட்ட ரோஜா மலர்கள் நிறம் மாறி பக்தர்களை பரவசப்படுத்தியது.

    இதேபோல பூஜை செய்யப்பட்ட ரோஜா மலர்களை சில பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    அந்த மலர்களும் நிறம் மாறியதால் பக்தர்களிடையே பரபரப்பு நிலவுகிறது.

    இதுபற்றி பக்தர்கள் கூறும்போது ரோஜா மலர்கள் பூஜையின்போது நிறம் மாறுவது சாய் பாபாவின் அற்புதம் என்று கருதுவதாகவே தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிறவர்கள் தட்சணை கொடுக்க ஆரம்பித்தார்கள்.
    • வாங்குவார், அடுத்த நிமிடமே அருகில் உள்ள ஏழைகளுக்கு அள்ளி இறைத்து விடுவார்.

    பாபாவின் புகழ் பரவப் பரவ சீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக்கிக் கொண்டே சென்றது.

    ஆரம்ப காலங்களில் வந்தவர்கள் பாமரர்கள், படிப்பு அறியாதவர்கள், சமய உணர்வு உள்ளவர்கள் தான். ஆனால் அந்த நிலை மாறியது.

    அறிஞர்கள், வழக்கறிஞர்கள், தத்துவ வித்தகர்கள், சமயப் பெரியார்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிள், ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாபாவைத் தரிசிரிக்க வந்தனர்.

    வாழ்க்கைப் போராட்டத்தில் நசிந்து போனவர்கள், இனம் புரியாத மனப் போராட்டங்களில் இடிந்து போனவர்களெல்லாம் கரைபுரளும் கோதாவரி வெள்ளம் போல் பாபாவைத் தேடி வந்தனர்.

    ஆனால் பாபா எப்போதும் போல் அமைதியாகத் தான் இருந்தார். தம்மைத் தரிசிக்க இவ்வளவு பெரிய கூட்டமா என்று கணக்குப் போட்டு அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

    வருகிறவர்கள் தட்சணை கொடுக்க ஆரம்பித்தார்கள். வாங்குவார், அடுத்த நிமிடமே அருகில் உள்ள ஏழைகளுக்கு அள்ளி இறைத்து விடுவார்.

    அன்றைக்கு தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று பாபா தீர்மானித்தால் அந்தப் பொறுப்பையும் தாமே சுமந்து கொள்வார்.

    தட்சணையாய் வந்த தொகையோடு கடை வீதிக்குப் போவார். சோளம், கேழ்வரகு, மாவு, வாசனைப் பொருட்கள் அனைத்தையும் அவரே வாங்குவார். சுமந்து வருவார்.

    சோளம், கோதுமை அரைக்க ஒரு திருகை வைத்திருந்தார். அந்த திருகையால் அவரே மாவு அரைப்பார். அந்தத் திருகை இன்றும் உள்ளது.

    மசூதிக்கு முன் பக்கம் உள்ள திறந்த வெளியில் அடுப்பு மூட்டுவார்.

    அடுப்பின் மீது ஹண்டி என்ற பாத்திரத்தை வைப்பார். 50 பேர்களுக்கு உணவு சமைக்க ஒரு ஹண்டி, 100 பேர்களுக்கு உணவு சமைக்க இன்னொரு பெரிய ஹண்டி.

    சமயங்களில் அவர் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வார், சமயங்களில் ஆட்டுக்கறி வாங்கி வரச் சொல்லி புலவு தயார் செய்வார்.

    மவுலியை அழைப்பார், தொழுகை நடத்தி அந்த உணவைப் புனிதப்படுத்தச் சொல்வார்.

    உணவின் முதல் பகுதியை மகால்சபாதிக்கும், தாத்யா படீலுக்கும் அனுப்பி வைப்பார்.

    அதன் பின்னர் அவரே பரிமாறுவார். பாபாவின் பொற்கரங்களால் பிரசாதம் பெறுவது என்பது சாதாரண காரியமா? அப்படிப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

    இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா?

    1910-ஆம் ஆண்டு வர தம்மைத் தேடி வந்த பக்தர்களுக்கு பாபா இப்படி உணவு அளித்தார்.

    ஆனால் அதன் பின்னர் பாபாவிற்காக வந்த காணிக்கைகள், பழங்கள், இனிப்புப் பண்டகங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை."

    அவைகளைக் கொண்டு வந்த பக்தர்கள் மலை மலையாய் குவித்து விட்டனர். அவைகளெல்லாம் பாபாவிற்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டன.

    முதலில் ஆரத்தி நிகழ்ச்சி அடுத்த பாபா எல்லோரையும் ஆசீர்வதிப்பார், அணையாது எரியும் அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட உதியை (விபூதியை) வழங்குவார்.

    அதன் பின்னர் அவர் தர்காவின் உள் அறையில் அமருவார்.

    பக்தர்கள் கொண்டு வந்த அத்தனை உணவுப் பண்டங்களும் ஒன்றாகக் கலக்கப்படும், "வழங்குக" என்று பாபா தலை அசைப்பார். எதிரே அமர்ந்த பக்தர்களுக்கு மட்டுமல்ல வெளியே காத்திருந்த பக்தர்களுக்கும் வயிறும், மனமும் நிரம்பும் அளவிற்கு உணவு வழங்கப்படும்.

    அந்த வழக்கம் இன்றும் சீரடியில் தொடர்கிறது.

    • முதலில் ““ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மகாராஜ் கீ ஜய்”” என்று ஒருமுறை குரல் எழுப்பவும்.
    • ““ஓம் சாய் ஸ்ரீ ஸாயி ஐய ஐய ஸாயி”” என்ற மூல மந்திரத்தை ஏழு முறை உச்சரிக்கவும்.

    ஸ்ரீசாயி அம்ருத்வாணி ஒரு முக்கியமான கர்ந்தமாகப்படும். இதனை சுமூகமாக பாராயணம் செய்தால் மிகுந்த சந்தோஷத்தை அடையலாம். இதனை வாத்தியத்துடன் இசையோடு பாடலாம்.

    1. முதலில் ""ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மகாராஜ் கீ ஜய்"" என்று ஒருமுறை குரல் எழுப்பவும்.

    1. ""ஓம் சாய் ஸ்ரீ ஸாயி ஐய ஐய ஸாயி"" என்ற மூல மந்திரத்தை ஏழு முறை உச்சரிக்கவும்.

    3. பின் கீழ்வரும் ""ஸாயி க்ரூபா அவதரண்"" எனும் அடியில் உள்ள ஸ்லோகங்களில் தொடங்கி ""மங்களமய பிரார்த்தனை"" வரையும் பாராயணம் செய்யவும். ஒரு நிமிடம் மவுனமாக இருந்தபின் மறுபடியும் மங்களமய பிரார்த்தனையைப் படிக்கவும்.

    4. ஸ்ரீ சாயி அம்ருத் வாணி படித்த பின் அவரவர் நேரத்துக்கு ஏற்றார் போல் சாயி லீலா. சாயி மகிமை, சாயி பஜனை மற்றும் பாபாவின் ஸத் சரித்திரத்தையும் உபந்யசமாக செய்யலாம். பாபாவின் ஆரத்தி பாடவும்.

    5. பிறகு ""ஓம் சாய் ஸ்ரீ சாயி ஐய ஐய சாயி"" என்று ஏழு முறை உச்சரிக்கவும்.

    6. முடிவில் ""ஸ்ரீ சச்சிதானந்த சத்ருகு சாயிநாத் மஹாரஜ் கீ ஜய்"" என்று குரல் எழுப்பி பூர்த்தி செய்யவும்.

    • அதற்கு பாபாவின் ஆசியும் அனுமதியும் கிடைத்தது . உருசு விழாவை ராம நவமி நாளன்று நடத்துவது என்று முடிவாயிற்று.
    • இதனால் இஸ்லாமியர்களும் இந்துகளும் ஒன்று படவும் அவர்களுடைய விழாக்களும் ஒருங்கிணைந்து நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.

    கோபர்கானில் இருந்த கோபால்ராவ்குண்டு என்பவர் பாபாவின் பரம பக்தர்களில் ஒருவர்.

    அவருக்கு மூன்று மனைவியர் இருந்தனர் என்றாலும் அவருக்கு மூன்று மனைவியர் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது.

    பின்னர் பாபாவின் ஆசியால் அவருக்கு ஒரு மகன் பிறந்தான்.

    அதனால் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்த அவர் சிறப்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

    உருசு என்ற விழாவை சீரடியில் நடத்தலாம் என அவருக்குச் தோன்றியது. தம் விருப்பத்தைச் சில பக்தர்களிடம் கூற அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

    அதற்கு பாபாவின் ஆசியும் அனுமதியும் கிடைத்தது . உருசு விழாவை ராம நவமி நாளன்று நடத்துவது என்று முடிவாயிற்று.

    இதனால் இஸ்லாமியர்களும் இந்துகளும் ஒன்று படவும் அவர்களுடைய விழாக்களும் ஒருங்கிணைந்து நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.

    மேளதாளத்துடன் நடந்த ஊர்வலத்தின் போது தட்டுகளில் சந்தனம் எடுத்துச் செல்லப்பட்டது.

    ஊர்வலம் சீரடி தெருக்களின் வழியே சென்று பின்னர் மசூதிக்குத் திரும்பும்.

    ஒரே நாளில் இந்துக்கள் கொடிகளை ஏற்றிச் செல்ல இஸ்லாமியர்கள் சந்தனத்தை எடுத்துச் செல்ல இரு மத்தினரும் எந்த மன வேற்றுமையுமின்றி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடினர்.

    • அவரவர்களுக்கு விருப்பமான கோவில்களுக்குச் செல்லுதல், தமது இஷ்டத் தெய்வங்களை வணங்குதல் ஆகியவற்றை பாபா ஆதரித்தார்.
    • தெய்வங்களின் படங்களையும் சிவலிங்கங்களையும், பாதுகைகளையும் பாபா தாமே தம் பக்தர்களுக்குக் கொடுப்பது உண்டு.

    எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுதல், சகிப்புத்தன்மை, கடவுள் நம்பிக்கை முதலியவை பக்தர்களிடம் இருக்க வேண்டும் என்பதை பாபா அடிக்கடி வலியுறுத்தினார்.

    அவரவர்களுக்கு விருப்பமான கோவில்களுக்குச் செல்லுதல், தமது இஷ்டத் தெய்வங்களை வணங்குதல் ஆகியவற்றை பாபா ஆதரித்தார்.

    தெய்வங்களின் படங்களையும் சிவலிங்கங்களையும், பாதுகைகளையும் பாபா தாமே தம் பக்தர்களுக்குக் கொடுப்பது உண்டு.

    தம்முடைய படங்களையே கூட அவர் அளிப்பதுண்டு. பக்தர்களின் கூட்டம் பெருகு வதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று.

    பாபாவின் வாழ்நாள் இறுதி வரை அவர் இஸ்லாமியரா, இந்துவா என்று எவராலும் அறிய முடியவில்லை.

    அவருடைய உபதேசங்களில் இந்து ,முஸ்லிம் ஒற்றுமை இழையோடியது.

    அது மட்டுமல்லாமல் அவருடைய அன்பு என்ற அடிப்படைக் கொள்கையினால் மக்களை சாதி சமய வேறுபாடின்றி ஒருங்கிணைத்தார்.

    படிப்படியாக ஒருங்கிணைந்த ஒரு சமுதாயத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு வழிபாட்டு சடங்குகளில் இஸ்லாமியர் தலையிடாமல் இருந்தனர்.

    அதைப்போலவே இஸ்லாமியர் வழிபாட்டு நேரத்தில் இந்துகள் தலையிடாமல் இருந்தனர். மத சகிப்புத்தன்மையை பாபா வலியுறுத்தினார்.

    • சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.
    • ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்.

    ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும்.

    ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும்.

    * இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும்.

    * மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும்.

    * சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.

    * ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்.

    * ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த பாபா தொடர்பான புத்தகங்களை இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் பலருக்கு வழங்கவும்.

    ×