search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும்.
    • மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    1. அய்யப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னிதானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.

    2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் அய்யப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

    3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை அய்யப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும்.

    அய்யப்பனாக மாலை தரித்த நிமிடத்திலிருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

    5. மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப் பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி அய்யப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனை களில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து அய்யப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

    8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

    9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    10. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.

    11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, "சாமி சரணம்" எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் "சாமிசரணம்" எனச் சொல்ல வேண்டும்.

    12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த அய்யப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தி னாலும் உணவு அருந்தக்கூடாது.

    13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.

    14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் "நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்" என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது "போய் வருகிறேன்" என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் அய்யப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பத்தியுணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

    15. மாலையணிந்த அய்யப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.

    16. மாலையணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

    17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா அய்யப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் அய்யப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. அய்யப்பமார் ஒருவருக் காவது அன்னமிடுதல் மிக்க அருள் பாலிக்கும்.

    18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதி லும் அய்யப்பமார் களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மர ணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி அய்யப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. அய்யப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.

    19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமானதாகும். எனவே எந்தப்பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.

    20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து அய்யப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.

    21. கன்னி அய்யப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்திலி ருந்து அய்யப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை அய்யப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண் டும்.

    22. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வய தான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

    23. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

    24. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர் களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

    25. பம்பையில் சக்தி பூஜையின்போது அய்யப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    26. இருமுடியில் அய்யப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பி யதும் இந்த நெய்யை யும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

    27. அய்யப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு அய்யப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

    28. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களிலெல்லாம் அய்யப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. அய்யப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான அய்யப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

    29. அய்யப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி அய்யப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள். என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல் நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டு களிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் அய்யப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.

    30. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் அய்யப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.

    31. யாத்திரை இனிதே நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி அய்யப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    • இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
    • மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் அய்யப்பன்.

    சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்ம வினையிலிருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

    அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்ம சிந்தனை, செயல்பாடுகள் வேண்டும்.

    இவை இருந்தால் முக்தி கிடைக்கும். அது கிடைக்க ஒரே இறைவழிபாடு அய்யப்பனே!

    ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லறத் துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும்.

    மாலை போட்ட பிறகு எல்லா அய்யப்பமார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது.

    அய்யப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். நான், எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது.

    அய்யப்பனுக்கு விரதம் முக்கியம் 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்குப்போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.

    ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது.

    பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் அய்யப்பன் தரிசனம் தான் பரிகாரமாகும்.

    இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

    மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் அய்யப்பன்.

    பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே அய்யப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை.

    பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக்கூடிய ஒரே கடவுள் அய்யப்பன் தான்.

    • இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
    • நடுப்பாகத்தில் அய்யப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும்.

    சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை விவரம் வருமாறு:

    அய்யப்பனை அன்னதான பிரபு என்பார்கள். அய்யப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்.

    பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம்.

    வசதி படைத்தவர்கள் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும்.

    தானம் செய்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம்குடி பூஜை நடத்த வேண்டும். கன்னி அய்யப்பன்மார்கள் இந்த பூஜையை கட்டாயம் செய்ய வேண்டும்.

    சபரிமலைக்கு இருமுடி கட்டு ஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11&ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும்.

    வீட்டின் கிழக்குப்பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைக்க வேண்டும்.

    பந்தலை அலங்கரித்து நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும்.

    மண்டபத்தில், அய்யப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.

    நடுப்பாகத்தில் அய்யப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும்.

    கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும்.

    அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும்.

    பூவரசு அல்லது பலர் விறகுகளை ஆழியில் போட வேண்டும்.

    அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து அய்யப்பன் மார்களும் ஆழியை வலம் வர வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான அய்யப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜை நடத்தலாம்.

    விரத காலத்தில்... எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே அய்யப்ப விரதத்தின் தத்துவம், உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

    அய்யப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர்.

    சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து அய்யப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.

    • பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலை முறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
    • தமிழ்நாட்டில் முதன் முதலாக அய்யப்பனுக்கு குளித்தலையில் தான் கோவில் கட்டப்பட்டது.

    • தமிழ்நாட்டில் முதன் முதலாக அய்யப்பனுக்கு குளித்தலையில் தான் கோவில் கட்டப்பட்டது.

    • சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி அய்யப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் அய்யப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது.

    • பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலை முறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    • 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றவர் சில நூறு பேர் மட்டுமே. வாகன வசதி வந்த பிறகு தான் சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து இன்று பல கோடி ஆகிவிட்டது.

    • நடிகர் நம்பியார் 1943&ம் ஆண்டு தொடங்கி 50 ஆண்டுக்கும் மேலாக இருமுடி கட்டி விரதம் இருந்து மலைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பந்தளம் அரச குடும்பத்தினரின் வாரிசுகள் மட்டும் சபரிமலையில் 18 படிகளிலும் இரு முடி கட்டாமல் ஏறிச்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    • ஒரு அய்யப்ப பக்தர் மாலை அணிந்ததில் இருந்து அவர் சபரிமலை சென்று திரும்பும்வரை தினமும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது எரிய வேண்டும். சபரிமலை செல்லும் பக்தருக்கு இந்த விளக்கு வழி காட்டுவதாக ஐதீகம் உள்ளது. சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து "சுவாமியே சரணம் அய்யப்பா" என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும். அதன் பிறகே வீட்டுக்குள் செல்ல வேண்டும்.

    • சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.
    • சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம்.

    சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஅய்யப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்கர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி அய்யப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.

    இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்து நீரில் குளிக்க வேண்டும்.

    இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.

    விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.

    விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும்.

    விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம்.

    மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

    இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.

    • ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரும் நாட்களில் பதினெட்டும்படி பூஜை நடத்த மாட்டார்கள்.
    • தற்சமயம் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்,பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்ட பதினெட்டுப்படி பூஜைக்கு பக்தர்களிடமிருந்து பேராதரவு பெருகிய தால் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட்டன.

    ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரும் நாட்களில் பதினெட்டும்படி பூஜை நடத்த மாட்டார்கள்.

    தற்சமயம் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.

    இந்தப் பிரசித்தி பெற்ற பூஜையை நிகழ்த்த, சபரிமலை கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    முன்பணம் கட்டிவிட்டால் மற்ற ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து கொள்ளும்.

    கலசத் துணிகள், படி பூஜையின்போது தலைமை புரோகிதர் அணிய வேண்டிய உடைகள், கற்பூரம், சாம்பிராணி, 18 தேங்காய்கள் உதிரிப் பூக்கள், பூமாலைகள், 36 நிலை விளக்குகள் இவைகள் பூஜைக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள்.

    இந்தப்படி பூஜை நடத்தி முடிய சுமார் மூன்றுமணி நேரம் ஆகும்.

    ஐந்து அடி நீளமும், ஒன்பது அடி அகலமும் உள்ள பஞ்சலோகத் தகடு அடிக்கப்பட்ட படிகளின் நடுவில் பட்டுத்துணி விரித்து பூக்கள் வைக்கப்பட்டு (தாமரைப் பூவும் அடக்கம்) பூக்களின் மேல் தேங்காய் ஒன்றும் வைக்கப்படும். ஒவ்வொரு படிகளின் இரு புறத்திலும் இரண்டு நிலை விளக்குகளின் திரி கொளுத்தி வைப்பார்கள்.

    பூக்கள், பூமாலைகளைக் கொண்டு பதினெட்டுப்படிகளும் அதன் பக்க சுவர்களும் அலங்கரிக்கப்படும்.

    பதினெட்டுப் படிகளில் கீழாக இருக்கும் முதல் படியின் கீழே தளத்தில் அமர்த்து சபரிமலை சந்நிதானத்தை நோக்கியவாறு பதினெட்டுப்படி பூஜைகளை தலைமை புரோகிதர் நிர்வகிப்பார். ஒவ்வொரு படியிலும் பிரத்யேக பூஜை நடத்தப்படும்.

    பூஜை நடக்கும் போது நடை திறந்திருக்கும். படி பூஜை நிறைவுற்று, அத்தாழ பூஜையும் நடத்தி முடிந்த பிறகு தான் நடை அடைக்கப்படும்.

    பதினெட்டுப்படி பூஜையை அதிக அளவில் நடத்துபவர்கள் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, மஹாராஷ்டிர ஐயப்ப பக்தர்கள் தான்.

    • பதினெட்டு படிகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணம் என்று 18 புராணங்கள் உண்டு என்பது ஐதீகம்.
    • ஒவ்வொரு படியையும் ஒரு மலை தெய்வம் என்று சங்கல்பித்து படி பூஜை நடத்தப்படுகிறது.

    சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலின் சிறப்பானதும் தலைமயானதுமான பூஜை, பதினெட்டாம் படி பூஜை தான் அதிகம் செலவு ஆகும் பூஜையும் இதுதான்.

    மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த பூஜை, வேறு எந்த கோவில்களிலும் இல்லாத ஒன்று.

    பதினெட்டு படிகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணம் என்று 18 புராணங்கள் உண்டு என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு படியையும் ஒரு மலை தெய்வம் என்று சங்கல்பித்து படி பூஜை நடத்தப்படுகிறது.

    சபரிமலை பொன்னம்பலமேடு சௌண்டல் மலை, நாகமலை, சுந்தரமலை, சிற்றம்பலமேடு, கல்கிமலை, மாதாங்கமலை, மைலாடும்மேடு, ஸ்ரீபாதமலை, தேவர் மலை, நிலய்க்கல்மலை, தலப்பாலைமலை, நீலிமலை, கரிமலை, புதுசேரி, காளகெட்டி, இஞ்சிப்பாறை என்னும் பதினெட்டு மலைகளின் தெய்வங்களை சாந்திபடுத்தவே பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.

    சபரிமலையில் இரவு அத்தாழ பூஜைக்கு முன்பு பதினெட்டாம்படி பூஜை நடக்கும்.

    விசேஷமுள்ள இந்த பிரதான பூஜையை, சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமைப் புரோகிதர் மட்டுமே செய்ய வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது.
    • இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது. இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    சித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள்.

    அவரை நினைப்பதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.

    வைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.

    ஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.

    ஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு விரத வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.

    ஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.

    புரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர விரத பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.

    ஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விஷேசம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.

    கார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.

    மார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.

    தைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நக்ஷத்ரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.

    மாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி விரதமிருந்து பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.

    பங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு. 

    • ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது.
    • இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

    ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது.

    ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.

    அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

    இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும் வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

    • சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி பாப மோகினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.

    • வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி மோகினி ஏகாதசி என்றும், தேய்பிறை ஏகாதசி வருதித் ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள்  இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    • ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி அபார ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

    • ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி சயனி என்றும் தேய்பிறை ஏகாதசி ஏகாதசி யோகினி என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகராக பலன்கள் கிடைக்கப்பெறும்.

    • ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

    • புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா என்றும் தேய்பிறை ஏகாதசி அஜா என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமைவளரும்.

    • வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து 8 மாதமும் கோவிலுக்கு வந்து காசு வைத்து பூஜை செய்ய வேண்டும்.
    • 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ‘ஸ்ரீசொர்ணஹர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

    செல்வங்களை அதிகரிக்க ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணஹர்சன பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.

    அஷ்டமியில் அஷ்ட லட்சுமிகள் தங்கள் செல்வங்களை அதிகப்படுத்தி கொள்ள ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது.

    நாமும் ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணஹர்சன பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.

    வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும்.

    வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து 8 மாதமும் கோவிலுக்கு வந்து காசு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை 'ஸ்ரீசொர்ணஹர்சன பைரவாய நமஹ' என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

    சொர்ணஹர்சன பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில் நடந்து வருகிறது.

    • வெள்ளிக்கிழமை விரதம் முடியும் நாளில் மகேஸ்வர பூஜை செய்து, அடியார்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும்.
    • இந்த விரதத்தை அனுஷ்டித்து அத்திரி மகரிஷி சந்திரனையும் துர்வாசரையும் பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க- பதும நிதிகளைப் பெற்றார்.

    விநாயகருக்கு உகந்த இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனுஷ்டிக்க வேண்டும்.

    விரதத்தைத் தொடங்கும்போதே எத்தனை வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும் என்பதை சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

    அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு தூய ஆடைகளை உடுத்திக்கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

    பூஜையறையில் கலச ஸ்தாபனம் செய்து, அந்தக் கலசத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

    பின்னர் கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

    அன்று முழுவதும் எதுவும் உண்ணக்கூடாது. இரவு படுக்கப்போவதற்கு முன்பு சிறிதளவு பழமும் பாலும் உண்ணலாம்.

    வெள்ளிக்கிழமை விரதம் முடியும் நாளில் மகேஸ்வர பூஜை செய்து, அடியார்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும்.

    இந்த விரதத்தை அனுஷ்டித்து அத்திரி மகரிஷி சந்திரனையும் துர்வாசரையும் பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க- பதும நிதிகளைப் பெற்றார்.

    • ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வாரம் ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
    • எனவே மிகவும் திட்டமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஆன்மிக பலம் பெறுவதோடு ஆரோக்கிய பலத்தையும் பெறுகிறார்கள்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வகை விரத வழிபாடு உள்ளது.

    பெரும்பாலான விரதங்கள் நாள், திதி மற்றும் பண்டிகைகளை பின்பற்றியே வருகின்றன.

    அந்த நாட்களில் விரதம் இருந்து சாமியை கும்பிடுவதால் பக்தர்களுக்கு திருப்தி உண்டாகிறது.

    சரி.... நாம் இருக்கும் விரதம் சரியான விரதம்தானா? இந்த கேள்விக்கு விடை காண முயன்றால் விரதம் பற்றிய சரியான புரிதல் நமக்கு ஏற்படும்.

    யாரெல்லாம் விரதம் இருக்க வேண்டும் என்பது தெளிவாகும்.

    எந்தெந்த பண்டிகை நாட்களில் நாம் விரதம் இருக்க வேண்டும் என்பது தெரியவரும்.

    இதன் தொடர்ச்சியாக விரதம் இருக்கும் போது கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் எவை&எவை என்பதும் தெரியும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வாரம் ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.

    இந்து மத பண்டிகை நாட்களில், அடிக்கடி விரதம் இருக்கும் போது, நம்மையும் அறியாமல் நாம் நம் உடம்பை மேம்படுத்திக் கொள்கிறோம்.

    எனவே மிகவும் திட்டமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஆன்மிக பலம் பெறுவதோடு ஆரோக்கிய பலத்தையும் பெறுகிறார்கள்.

    அதற்கு உதவும் வகையில் எந்தெந்த பண்டிகை நாட்களில் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்ற குறிப்பை உங்களுக்காக மாலைமலர் தொகுத்து வழங்கியுள்ளது.

    விரதம் இருங்கள்... வினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

    ×