என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
- இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு இணையானது.
- இன்று விரதம் இருந்து தானம் செய்வது சிறப்பானது.
இன்று பானு சப்தமி தினமாகும். ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் பானு சப்தமி. இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு இணையானது. அதாவது பானு சப்தமி நாளில் நாம் செய்யும் பூஜைகள் மந்திர ஜபங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தை காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தை தரக்கூடியவை.
இன்று காலையில் புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய இருதயம் போன்ற சூரிய மந்திர பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பட்சணங்களை தருவதும், தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்த கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளை பெற்றுத் தரும். மேலும் கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். தந்தைக்கு ஆரோக்கியம் கிட்டும்.
விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது நல்ல பலன்கள் கிடைக்க உதவும்.
- எல்லா விரதங்களையும் விட சிறப்பானது இந்த மௌன விரதம்.
- செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் மட்டுமாவது மௌன விரதம் இருக்கலாம்.
மௌனவிரதம் இருப்பதில் இரண்டு நன்மைகள் நமக்கு நடக்கின்றது. ஒன்று, செய்த பாவத்திற்கான கணக்குகள் குறையும். புதியதாக அந்த சமயத்தில் நாம் பேசி வரக்கூடிய பாவங்களை வர விடாமல் தடுக்கும். எல்லா விரதங்களை விட சிறப்பான விரதம் இந்த மௌன விரதம் தான்
தினமும் வரக்கூடிய ராகுகால நேரம் என்பது 1 1/2 மணி நேரம். இந்த ஒன்றரை மணி நேரத்தில் பொதுவாகவே யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த ராகு கால வேளையில் நாம் என்ன நினைக்கின்றோமோ, நாம் என்ன பேசுகின்றோமோ, அது பலிதம் ஆகும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை.
ராகு கால வேளையில் தானே தீராத கட்டத்திற்கான வேண்டுதலை துர்க்கை அம்மனிடம் வைத்து, பிரார்த்தனை செய்கின்றோம். அந்த சமயத்தில் நாம் வைக்கும் வேண்டுதல் விரைவாக பலிக்குதா? இல்லையா? முடிந்தவரை இந்த ராகு கால சமயத்தில் கெட்ட வார்த்தைகளையும் அடுத்தவர்களுக்கு திட்ட எதிர்மறை எண்ணங்களையும் உங்களுடைய மனதிற்குள் கொண்டு வரவே கூடாது.
நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, இந்த ராகுகால சமயத்தில் மௌன விரதம் இருப்பது மிகவும் நல்லது. வெளியில் சென்று வேலைக்கு செல்பவர்களுக்கு இது சாத்தியமில்லை. இருப்பினும், அந்த ராகு கால சமயத்தில் அனாவசியமான பேச்சை தவிர்த்துக் கொள்ளலாம். அந்த சமயத்தில் அம்மன்களின் பெயரையோ அல்லது 'ஓம் சக்தி' என்ற மந்திரத்தையும் மனதிற்குள் உச்சரித்துக் கொள்வது நமக்கு பல நன்மையை தேடித்தரும்.
நீங்கள் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தால் உங்களுடைய பாவங்களை குறைப்பதற்கும் இந்த ஒன்றரை மணி நேரம், முடிந்தால் மௌன விரதம் இருக்கலாம். மௌன விரதம் இருக்கும் பெண்களுக்கு கட்டாயம் நல்ல பலன் உண்டு என்பது மட்டும் உறுதி. (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் மட்டுமாவது இந்த மௌன விரதத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.)
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் வந்தால், அந்த ஞாயிற்றுக் கிழமையில் 4.30 யிலிருத்து 6 மணி வரை ராகு காலமாகும். அந்த தினத்தில் பிரதோஷ காலமும் சேர்ந்து வரும் பட்சத்தில், அந்த 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் மௌன விரதம் இருந்து, எந்த வேண்டுதலை எம்பெருமான் இடமும், சக்திதேவி இடமும் வேண்டி கேட்டுக் கொண்டால், உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் பலிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
- கீழ்கண்ட முறையில் விரதம் இருக்க ஆன்மிக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- விரதம் என்பது அனைத்து தெய்வத்துக்கும் ஒன்றாக உள்ளது.
இறைவனின் அருளை பெற பக்தர்கள் பல்வேறு வழிபாட்டு முறைகளை பின்பற்றுகின்றனர். இதில் விரதம் என்பது அனைத்து தெய்வத்துக்கும் ஒன்றாக உள்ளது. தேவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரதர், விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது.
முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும் என்றால் பக்தர்கள் கீழ்கண்ட முறையில் விரதம் இருக்க ஆன்மிக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப்பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும்.
மாலையில் வீட்டில் முருகப் பெருமான் திருவுருவப் படத்தை அலங்கரித்து, தீபம் காட்டி, அரிசியும், துவரம்பருப்பும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து, அந்தப் பொங்கலையே பிரசாதமாக உண்டு விரதத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
- மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.
- அதிகாலை நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம்.
சங்கட ஹர சதுர்த்தி விரதம், விநாயகப் பெருமானுக்குரியது. விநாயகரை வழிபடுவது என்பது அனைத்துவிதமான பிரச்னைகளுக்குமான தீர்வை அளிப்பது. எளிதில் கடைப்பிடிக்க முடிவது. பிரச்னைகள் தீரப் பல வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் கடைப்பிடித்துப் பயன்பெற வேண்டிய விரதம் இது.
நாளை அதிகாலை நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம். உபவாசம் இருக்க முடிபவர்கள் நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து விரதமிருக்கலாம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.
வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், ஏற்கெனவே வீட்டில் விநாயகர் விக்கிரகமோ படமோ இருந்தால் அதற்குப் பூஜைகள் செய்யலாம். இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், விநாயகர் அகவல் போன்ற நற்றமிழ் பாடல்களைப் பாடலாம். விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களே பிரியம். தனியாகப் பிரசாதங்கள் செய்ய நேரம் வாய்க்காதவர்கள் பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம்.
ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம்செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும். விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தியோடு தரிசனம் செய்தாலே மனக்கஷ்டங்கள் அத்தனையும் தீர்ந்துவிடும். விநாயகருக்கும் சந்திரனுக்கும் செய்யப்படும் தீபாராதனைகளைத் தரிசனம் செய்ய, நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும். தொடர்ந்து 9 சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகர் ஆலயம் சென்று வணங்கிவந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சங்கடஹர சதுர்த்தி தினத்தில்தான், சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைந்தனர். எனவே, ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
- விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.
- பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம் அன்று வரக்கூடிய பவுர்ணமி நாளன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் நடைபெறும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனை தேர் நோன்பு என்றும் கூறுவர். இந்நாளில் மக்கள் பொங்கல் வைத்தும், கும்மியடித்தும் பழனி முருகனை வழிபடுகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உமாதேவியார் முருகனிடம் வேலை எடுத்துக் கொடுத்து தாரகன் என்றும் அசுரனை வென்று வரும்படி கூறிய நிகழ்வினை போற்றும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது என்பது ஐதீகமாகும்.
இந்நாளில் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதன் தாக்கம் குறைகிறது என்ற நம்பிக்கை இருக்கிறது.
தங்களின் வாழ்க்கை செழிப்பாகும், நினைத்த காரியம் கைக்கூடும் என்று நினைத்து பழனிக்கு வரும் மக்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாமும் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.
- உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
- கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.
தைப்பூச நாளான இன்று கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய மூன்றும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கந்தபுராணம் சொல்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறிட்டு ஓம் சரவணபவ என்ற முருகனின் மூல மந்திரத்தை குறைந்தது 12 முறை மனதார உச்சரிக்க வேண்டும். உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
கூடுமானவரையில் பால், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் பணியிடத்தில் இருந்து திரும்பியதும் அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் அளித்த கதையை படித்து நேரமிருப்பவர்கள் கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.
அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கிவிட்டு இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இரவு சிறிது பால்சோறு சாப்பிடலாம். மறுநாள் காலை நீராடி, திருநீறு இட்டு முருகனின் மூல மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்து மனதார வணங்கி விரதத்தை நிறைவு செய்துவிட்டு வழக்கம்போல் உண்ணலாம்.
- பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
- வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். பவுர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பவுர்ணமி ஒளிமயமான தினத்தில் விரதம் இருந்து அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பவுர்ணமி நாளில் வீட்டிலும்,கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று சந்திரன் பகவான் உதயம் ஆகும் நேரத்தில் விரதம் இருந்து இந்த பூஜை செய்வது சிறந்தது. சத்ய நாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான நாராயணனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும். பெருமாள் எடுத்த பல அவதாரங்களில், சத்ய நாராயண அவதாரமும் ஒன்று. திருமணம், வீடு, மனை வாங்கும் போது, திருவிழா என எல்லாவித நல்ல காரியத்திற்கு முன் இந்த சத்யநாராயண பூஜை நடத்தப்படுகின்றது. அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பூஜை நடத்தப்படுகின்றது.
உலகத்தை படைத்த உலக நாயகியான அம்பிகையை பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபட வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி ஒளிமாயமான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.
தை மாதம் வரும் பவுர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி அம்பிகையை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பாயாசம் நைவேத்தியம் படைத்து பவுர்ணமியை வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். தை மாதம் வரும் பௌர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- ஜெகமுத்து மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- சனிக்கிழமை பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு புறப்படுகின்றனர்.
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் இருந்த ஜெகமுத்து மாரியம்மன் கோவில் சாலை விரிவாக்கம் காரணமாக தற்போது நாச்சியார்பேட்டை அருகே எருமனூரில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் இருந்து வருடந்தோறும் தை மாதம் பக்தர்கள் விரதம் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு கடந்த 26-ந் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக ஜெகமுத்து மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரியம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடைவீதி, தென்கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டுச் சென்றனர். இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தரையில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு புறப்படுகின்றனர்.
- இன்று ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
- வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள்.
பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
அந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம். பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.ஒவ்வொரு மாதத்திலும் பிரதமை முதல் சதுர்த்தசி வரை இரண்டு திதிகள் வருவதுண்டு. அதாவது வளர்பிறை பிரதமை முதல் பவுர்ணமி திதி வரையிலும், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையிலும் என இரண்டிரண்டு திதிகள் மாதந்தோறும் வருவது வழக்கம். இதில் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி முதல் சதுர்தசி வரையிலும் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு பலாபலன்களை நமக்கு வழங்கும்.
உத்தராயண காலத்தில் வரும் அஷ்டமி, ஏகாதசி போன்ற தினங்களில் விரதமிருந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த பருவத்தில் உயிர் நீத்தால் மோட்சம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மஹாபாரதப் போரில் பிதாமகர் என்றழைக்கப்பட்ட பீஷ்மருக்கு, உத்தராயண காலத்தின் முதல் அஷ்டமி தினத்தில் தான் பகவான் கிருஷ்ணர் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி அவருக்கு மோட்சம் அளித்தார். அதன் காரணமாகவே அந்த தினத்தை இந்துக்கள் அனைவரும் பீஷ்மாஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம்.
பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இன்று பீஷ்மர் ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம்.
வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள். நிர்ஜலா ஏகாதசி என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஸ்ரீமத் நாராயணனின் திருநாமங்களை உச்சரித்துகொண்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில் முக்கியமான ஏகாதசி இந்த பீஷ்ம ஏகாதசி நாளாகும்.
பீஷ்ம ஏகாதசி தினத்தன்று (இன்று) பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும். மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டதுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.
- இன்று (ஞாயிற்றுக்கிழமை) பீஷ்மாஷ்டமி தினமாகும்.
- பீஷ்மருக்கோ தந்தை உள்ளவர்களும், தந்தை இல்லாதவர்களும் அர்க்யம் கொடுக்க வேண்டும்.
மகாபாரதக் கதையில் வரும் முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். இவர் செய்த தியாகத்தின் பயனாக, தன்னுடைய தந்தையிடம் இருந்து 'விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம்' என்ற அற்புதமான வரத்தைப் பெற்றிருந்தார். 18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில் 10-ம் நாளில், அம்புகள் துளைக்க போர்க்களத்தில், அம்பு படுக்கையில் கிடந்தார், பீஷ்மர். உத்திராயன புண்ணியாலம் தொடங்கும்போது மரணிக்க வேண்டும் என்று காத்திருந்தார். தை மாதம் தொடங்கியும் கூட அவருக்கு மரணம் நேரவில்லை. உடலில் வலியும், வேதனையும் அதிகரித்தது. அப்போது அங்கு வந்த வியாசரிடம், "நான் செய்த பாவம் என்ன?. நான் விரும்பியும் கூட இன்னும் என்னை மரணம் தழுவாமல் இருக்க என்ன காரணம்?" என்று கேட்டார்.
அதற்கு வியாசர், "தன்னுடைய உடலாலும், மனதாலும் செய்வது மட்டுமே பாவம் அல்ல.. தன் எதிரில் நடைபெறும் குற்றத்தை, தனக்கு அதிகாரம் இருந்தும், ஆற்றல் இருந்தும் தடுக்காமல் இருப்பதும் பாவம்தான். அதற்கான தண்டனையைத்தான் உன்னுடைய உள்ளம் அடையும் வேதனையால் பெற்றுக்கொண்டிருக் கிறாய்" என்றார். இப்போது பீஷ்மருக்கு புரிந்தது. துரியோதன சபையில், திரவுபதி அவமதிக்கப்பட்டபோது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் இதற்கு காரணம் என்று உணர்ந்து வருந்தினார். பின்னர் இதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரிடமே கேட்டார்.
"ஒருவர் தான் செய்தது மகா பாவம் என்று உணர்ந்து வருந்தினாலே அவர்களது பாவம் அகன்றுவிடுவதாக வேதம் சொல்கிறது. நீயும் வருந்தியவுடன் உன்னுடைய பாவமும் நீங்கிவிட்டது. இருப்பினும் திரவுபதி, துரியோதன சபையில் தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காததுபோல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் தட்டிக்கேட்காத உன்னுடைய வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்" என்று கூறிய வியாசர், அதில் இருந்து விடுபடுவதற்காக வழியைக் கூறினார்.
"பீஷ்மா.. உன்னுடைய பாவங்களை பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கே உண்டு. சூரியனுக்கு உகந்தது எருக்கம் இலை. அதற்கு 'அர்க்கபத்ரம்' என்று பெயர். 'அர்க்கம்' என்பதற்கு 'சூரியன்' என்றும் பொருள் உண்டு. அந்த இலைகளைக் கொண்டு உன்னு டைய அங்கங்களை அலங்கரிக்கப்போ கிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்" என்று கூறிய வியாசர், அதன்படியே செய்தார்.
இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பீஷ்மாஷ்டமி தினமாகும். பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார் என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அதுபற்றி வியாசரிடம் கேட்கவும் செய்தான்.
அதற்கு வியாசர், "தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும், அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்" என்றார்.
அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு, பீஷ்மரின் வாழ்த்தும் கிடைத்து, சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
இன்று காலை குளித்து, சந்தியா வந்தனம் செய்து விட்டு பீஷ்மாஷ்டமி புண்ய காலே பீஷ்ம தர்ப்பணம் கரிஷ்யே என சொல்லி சுத்தமான நீரில் அனைவரும் அர்க்கியம் தரவும். தந்தை உள்ளவர்களும், திருமணம் ஆகாதவர்களும் இதை செய்தால் ஆரோக்கியம் ஏற்படும்.
தந்தை இல்லாதவர்கள்தான் தங்களது அப்பாக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் பீஷ்மருக்கோ தந்தை உள்ளவர்களும், தந்தை இல்லாதவர்களும் அர்க்யம் கொடுக்க வேண்டும். ஸ்ரீ பீஷ்மரின் சத்திய நெறியும், தூய்மையான பிரம்மச்சரியமும் அவரை என்றுமே புகழ்மிக்கவராகத் திகழச் செய்கிறது.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் 58 நாட்கள் இருந்ததாக மகாபாரதத்தில் கூறப்படுகிறது.
பத்ம புராணத்தில் உள்ள ஹேமாத்ரி விரத கண்டத்தில் பீஷ்மாஷ்டமி குறித்து கூறப்படுகிறது. பீஷ்மாஷ்டமியன்று பீஷ்மருக்கு எள் அஞ்சலி சமர்ப்பிப்பவர்களுக்கு சந்தான பிராப்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்று பீஷ்மருக்கு தர்ப்பணம் விட வேண்டும் என்று ஸ்மிருதி கவுஸ்துபம் என்ற நூல் குறிப்பிடுகிறது.
பீஷ்மாஷ்டமி இந்தியா முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விரதம் என்று விரதோத்சவ சந்திரிகா என்ற நூல் குறிப்பிடுகிறது.
"வையாக்ரயசத்ய கோத்ராய சாங்க்ருத்ய பிரவராயச அபுத்ராய ததாம்யே தஞ்ஜலம் பீஷ்மாய வர்மணே வசூ ராமாவதாராய சந்தனோராத்மஜாய ச அர்க்யம் ததாமி பீஷ்மாய ஆபால பிரஹ்மசாரிணே" என்று பீஷ்மருக்கு தர்ப்பணம் விட வேண்டும் என்று ஆமாதேர் ஜோதிஷி என்ற நூல் குறிப்பிடுகிறது.
இன்று தர்பணம் செய்பவர்களுக்கு ஓராண்டு செய்த பாவம் தொலையும் என்பது நம்பிக்கை.
- அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும்.
- ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது.
சூரிய பாகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, 'ரத சப்தமி' ஆகும். இது 'சூரிய ஜெயந்தி' என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே 'ரத சப்தமி' என்கிறோம்.
'சப்தம்' என்றால் 'ஏழு' என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும். உத்ராயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே 'ரத சப்தமி' என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் சூாியன் பயணிக்கும் தேரை இழுத்துச் சென்றும், 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகின்றன.
இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.
7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.
ரத சப்தமி தினத்தில் மேற்கொள்ளக்கூடிய ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது. தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள்ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும் வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். குளித்து முடித்த பிறகு சூரிய பகவானை வழிபட்டு ஒரு மண் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி சூரிய ஒளி அப்பாலில் விழும் படி சூரியனுக்கு நைவேத்தியம் வைத்து, சூரியனுக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.
கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.
மிகவும் அற்புதமான இந்த நாளில் தொடங்கும் தொழில், வியாபாரங்கள் பெருகும். பெண்கள் நற்கதியை அடைவார்கள். கணவனை இழந்த பெண்கள் இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன நமது புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்வது ஆன்மீக ரீதியான நற்பலன்களை தரும். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் பெருஞ்செல்வந்தர் ஆக உயர்வார்கள். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியமும், பலன்களும் உண்டு.முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். குல சாபங்கள் நீங்கும்.
இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஜெ.மாணிக்கம்
- டும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நீடிக்கும்.
- மன்மதன் ரதிதேவி பூஜை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தை மாத சுக்லபஞ்சமிக்கு ஸ்ரீ பஞ்சமி வசந்த பஞ்சமி என்று பெயர். இன்று விரதம் இருந்து மல்லிகைப்பூவால் மகாலட்சுமியுடன் மகா விஷ்ணுவையும் ரதி தேவியுடன் மன்மதனையும் படத்திலோ விக்ரகத்திலோ பூஜை செய்து பலவித பலகாரங்களுடன் நிவேதனம் செய்ய வேண்டும்.
சங்கீதம் நர்த்தனம் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அனைவரையும் குறிப்பாக புதிதாக திருமணம் ஆன தம்பதிகளை மன்மதன் ரதி தேவியாக பாவித்து அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கித் தந்து சந்தோஷப்படுத்த வேண்டும்.
கணவன்- மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் அன்பாக இருக்க இன்று விரதம் இருந்து செய்யும் மன்மதன் ரதிதேவி பூஜை மிகவும் பயனுள்ளதாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நீடிக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்