என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது
- மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
- சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். தொடர்ந்து மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
திருவிழாவை காண கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.