search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாசிப்பட்டினம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
    X

    பாசிப்பட்டினம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

    • 2-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
    • 18-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கலிய கிராமத்தினரின் கொடி ஊர்வலமும், வெள்ளையபுரம் வட்டானம் ஜமாத்தார் மற்றும் கிராமத்தினர் ஸ்தானிகன்வயல் மாணவநகரி கிராமத்தினரின் ரத ஊர்வலமும் மருங்கூர், எஸ்.பி.பட்டினம், பாசிப்பட்டினம் ஜமாத்தார் கிராமத்தினர் சார்பில் கப்பல் விமானம் போன்ற அலங்கார ரதத்துடனும் பாசிப்பட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தனர்.

    இவர்களை தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை மேளதாளங்கள் வாணவேடிக்கை முழங்க தர்காவிற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கொடியை பொதுமக்கள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு மவுலீது ஓதி பாசிப்பட்டினம் வன்னியர் படையாட்சி சமூகத்தினரின் முயற்சியால் கொடிமரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் விழா கமிட்டியை சேர்ந்த முஸ்தபா கமால், சேகனா துரை, அசரப்அலி, அமீர்கான், ஊராட்சி தலைவர் உம்மு சலீமாநூருல் அமீன், ஒன்றிய கவுன்சிலர் சிவசங்கீதா ராஜாராம் மற்றும் வருவாய் துறை, காவல் துறையினர், மகான் வாரிசுதாரர்கள், தர்கா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

    வருகிற 1-ந் தேதி ஹத்தம் தமாம் சிறப்பு பயான் மற்றும் விருந்து நிகழ்ச்சியும், இரவு மவுலீது ஓதி நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 2-ந் தேதி மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் பொதுமக்கள் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும், 10-ந் தேதி இரவு தலைக்கிழமை, 18-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒலியுல்லாஹ் பேரர்கள், விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×