என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது
- தெப்ப உற்சவம் 17-ந்தேதி நடக்கிறது.
- 18-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று முதல் வருகிற 16-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைகிறார்.
மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம், அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடைபெறும். இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் தாயார் எழுந்தருளி வலம் வருவார். பின்னர் இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார். இதைத்தொடர்ந்து 18-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார்.
இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.