என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் துளசி மஹாத்யம் உற்சவம் 30-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்18 July 2023 1:59 PM IST
- பெருமாளுக்கு துளசி மாலை மிகவும் பிடிக்கும்.
- கோவிந்தராஜசாமி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் துளசி மஹாத்யம் உற்சவம் வருகிற 30-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு துளசி மாலை மிகவும் பிடிக்கும். சிரவண சுத்த துவாதசி அன்று துளசி அவதரித்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 30-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை கோவிந்தராஜசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. அதில் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பங்கேற்று துளசி மஹாத்யம் ஓதுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×