search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ஆத்யாயன உற்சவம் 22-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருப்பதி கோவிலில் ஆத்யாயன உற்சவம் 22-ந்தேதி தொடங்குகிறது

    • 22-ந்தேதி தொடங்கி 2023 ஜனவரி 15-ந்தேதி வரை 25 நாட்கள் நடக்கிறது.
    • 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் ஆத்யாயன உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆத்யாயன உற்சவம் வருகிற 22-ந்தேதி தொடங்கி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை 25 நாட்கள் நடக்கிறது. இந்தத் திருவிழா வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்கள் முன்பு தொடங்கி நடக்கும் விழாவாகும்.

    நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் எனப்படும் 12 ஆழ்வார்கள் எழுதிய 4 ஆயிரம் பாசுரங்கள் இந்த 25 நாட்களிலும் வைஷ்ணவர்களால் தினமும் ஓதப்படுவது இந்த விழாவின் தனிச்சிறப்பாகும்.

    25 நாட்கள் நடக்கும் விழாவில் முதல் 11 நாட்கள், 'பகல் பத்து' என்றும், அடுத்த 10 நாட்கள், 'ராப்பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. 22-வது நாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு, 23-வது நாள் ராமானுஜ நூற்றந்தாதி, 24-வது நாள் வராஹ சாமி சாத்துமுறை, 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×