search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் வைகாசி மாதத்தில் நடக்கும் விழாக்கள்
    X

    திருப்பதி கோவிலில் வைகாசி மாதத்தில் நடக்கும் விழாக்கள்

    • வருகிற 25-ந்தேதி ராமானுஜர் பிறந்தநாள் விழா நடக்கிறது.
    • 25-ந்தேதி ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள் விழா நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகாசி மாதத்தில் நடக்கும் விழாக்களை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வைகாசி மாதம் ஒரு புனித மாதமாகும். அனுமன், ராமானுஜர், கர்நாடக சங்கீத மேதை தியாகராஜசுவாமி, தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார், தரிகொண்டா வெங்கமாம்பா ஆகியோர் வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆவர். அவர்களை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பாக விழாக்களை கொண்டாடி வருகிறது.

    வருகிற 25-ந்தேதி ராமானுஜர் பிறந்தநாள் விழா நடக்கிறது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் 1017-ம் ஆண்டு பிங்கலநாம மாதம் ஆருத்ரா நட்சத்திர நாளில் ஆதிசேஷ அவதாரமாக பிறந்தார். இவர் 1137-ம் ஆண்டு உயிரிழந்தார். தனது 120 ஆண்டுகால வாழ்வில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வைஷ்ணவத்தை மேம்படுத்தினார். அதன் மூலம் உயர்சாதியினர் மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட சாதியினரும் வைணவ மதத்தைத் தழுவும் வாய்ப்பைப் பெற்றனர்.

    நாட்டில் உள்ள பல வைஷ்ணவ ஷேத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கோவில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் முறையாக நடப்பதை உறுதி செய்ய ஏற்பாடு செய்தார். அவரை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா நட்சத்திர நாளில் ராமானுஜர் பிறந்தநாளை கொண்டாடுகிறது.

    தியாகராஜசுவாமி

    வருகிற 25-ந்தேதி ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அத்வைத சித்தாந்தத்துடன் இந்தியாவில் சனாதன தர்மத்தைப் பரப்பிய முதல் குரு இவர் தான்.

    வருகிற 26-ந்தேதி தியாகராஜசுவாமியின் பிறந்தநாள் நடக்கிறது. இவர், 1767-ம் ஆண்டு பிறந்தார். இவரின் வழித்தோன்றல்கள் பிரகாசம் மாவட்டம் காகர்லா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே தியாகராஜசுவாமியின் பக்தி, அறிவு ஆகியவற்றால் மகிழ்ந்த நாரத மகரிஷி ஸ்வரர்ணவம் என்ற இசை கட்டுரையை வழங்கினார்.

    தியாகராஜசுவாமி சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் திருவையாறில் இருந்து திருமலை ஷேத்திரத்துக்கு வருகை தந்தார். ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டார். அவர் 1847-ம் ஆண்டு உயிரிழந்தார். தியாகராஜசுவாமியை போற்றும் வகையில் 26-ந்தேதி திருமலையில் அவரின் பிறந்தநாள் விழா நடத்தப்படுகிறது. திருப்பதியில் உள்ள எஸ்.வி. இசை கல்லூரியிலும், திருமலை உள்ள நாதநீராஞ்ஜன மண்டபத்திலும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரமாண்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறது.

    தரிகொண்டா வெங்கமாம்பா

    தரிகொண்டா வெங்கமாம்பா 1730-ம் ஆண்டு பிறந்தார். அவர் ஏழுமலையான் மீது அசைக்க முடியாத பக்தியைக் காட்டினார். திருமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் சேவையை தொடங்கிய முதல் பெண் பக்தர் இவர் தான். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் வெங்கமாம்பா ஜெயந்தியை கொண்டாடி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி திருமலையில் வெங்கமாம்பா ஜெயந்தி விழா நடக்கிறது. அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவமும் கொண்டாடப்படுகிறது.

    தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார்

    தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் ஏழுமலையானை போற்றி 32 ஆயிரம் பக்தி கீர்த்தனைகளை எழுதி பாடியவர். இவர் 1408-ம் பிறந்தார். அவர் 1503-ம் ஆண்டு உயிரிழந்தார். இவர், முதல் தெலுங்கு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆவார்.

    அன்னமாச்சாரியார் ஜெயந்தியையொட்டி மே மாதம் 6-ந்தேதி திருமலை, திருப்பதி மற்றும் தாளப்பாக்கத்தில் இசை, கலாசாரம், இலக்கிய ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதேபோல் 22-ந்தேதி பரசுராம ஜெயந்தி விழா, 23-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், சீனிவாச தீட்சிதர் வருட திருநட்சத்திரம், மே மாதம் 4-ந்தேதி மதுரகவியாழ்வார் ஜெயந்தி விழா, அனந்தாழ்வார் ஜெயந்தி விழா, மே 5-ந்தேதி கூர்ம ஜெயந்தி, மே 7-ந்தேதி பராசரபட்டர் வருட திருநட்சத்திரம், மே 14-ந்தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×