என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற உள்ளது.
- குறைகளை மட்டும் முழு விவரங்களுடன் கோட்டத்தில் அளித்த பதிலுடன் எழுத வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற உள்ளது. அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தங்களது புகார்களை மண்டல அளவிலான பென்சன் அதாலத் என்று தபால் உறையின் மீது எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தர்மபுரி கோட்டம், தர்மபுரி-636701 என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கோட்ட அளவில் தீர்க்க முடியாத ஓய்வூதியம் தொடர்பான குறைகளை மட்டும் முழு விவரங்களுடன் கோட்டத்தில் அளித்த பதிலுடன் எழுத வேண்டும். சட்ட ரீதியான பிரச்சினைகள் மற்றும் அரசின் கொள்கைகள் சார்ந்த குறைகளை தவிர்க்கவும் ஓய்வூதியர்கள் கேட்டுக ்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.
- இருவரையும் போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஓசூர்,
கிருஷணகரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வரர் நகரில் உள்ள முனீஸ்வரர் கோயில் அருகே நேற்று 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள், பெங்களூர் சாதிம் நகர் பகுதியை சேர்ந்த குமார் (49) மற்றும் பெங்களூரு உளிமாவு பகுதி மீனாட்சி கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் (30) என்பதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து முறையே 1 1/4 கிலோ மற்றும், ஒரு கிலோ கஞ்சா பொருள்கள் என மொத்தம் 2 1/4 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களையும், அவர்கள் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளையும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், அரூர் மின்கோட்ட செய ற்பொறியாளர் பூங்கொடி வெளியிட்டு ள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜ் பாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்ப ம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா, ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாமல் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார்.
அப்போது அந்த சாலை வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே செங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது65). கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
- பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார்.
காவேரிபட்டணம்,
தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து காவேரிப்பட்டணத்தில் தி.மு.க.வினர் 10-க்கும் மேற்பட்ட காளை மாடுகளுக்கு மாலை அணிவித்து ,பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முக்கிய பிரமுகர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதே போல் காவேரிப்பட்டணம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி னார்கள்.
- ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.44 விலை குறைந்தது.
- மொத்தம் ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 812-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடு களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,117 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,193 கிலோவாக அதிகரித்தது.
நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.44 விலை குறைந்தது.
நேற்று அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.448-க்கும், குறைந்தபட்சமாக ரூ.252-க்கும், சராசரியாக ரூ.365.72-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 812-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- பின்னால் வந்த சரக்கு லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரிமங்கலம்,
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வாழகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (44). லாரி டிரைவர். இவர் லாரியில் பெருந்துறையில் இருந்து இரும்பு பாரம் ஏற்றி கொண்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது இவரது லாரி பழுதாகியது. பின்னர் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு பழுது பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 9 மூட்டை அரிசி என மொத்தம் 450 கிலோ பறிமுதல் செய்தனர்.
- ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.
தருமபுரி,
ரேசன் அரிசியை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோரை தடுக்கும் பொருட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் வேணு கோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தருமபுரி பாபா சாகிப் தெருவில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் சேகர் (47) என்பவரது வீட்டில் இட்லி கடைகளுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டி ருந்த ரேஷன் அரிசியை தலா 50 கிலோ எடைகொண்ட 9 மூட்டை அரிசி என மொத்தம் 450 கிலோ பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.
- மீண்டும் தகராறு ஏற்பட்டதால் விரக்தியில் இருந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த ராஜகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம், மே.19-
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (37). லாரி டிரைவர். இவரது மனைவி சிந்தினி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் விரக்தியில் இருந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
- முருகேசன் குண்டல்பட்டி சாலையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சாமிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). அரசு பேருந்து டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகிய நிலையில் 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இவரது மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் முருகேசன் குண்டல்பட்டி சாலையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- இன்று காலை சிகிச்சை பலனின்றி மவுலிஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ,ெபன்னாகரம் அருகே உள்ள கொச்சரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் மவுலிஸ்வரன் (வயது 22). இவர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை மல்லாபுரம் ஏரி அருகே இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மவுலிஸ்வரனை அந்த சாலை வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி மவுலிஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்