search icon
என் மலர்tooltip icon
    • விவசாயிகள் 6,581 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • தேங்காய்கள் 68 ஆயிரத்து 445 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6,581 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 52 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2,898 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 68 ஆயிரத்து 445 ரூபாய்க்கு விற்பனையானது.

    • புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் தாசில்தாராக பணியாற்றி வந்த தாமோதரன் தற்போது ஈரோடு கேபிள் டி.வி. தாசில்தாராக பணி மாறுதலாகி சென்றார்.

    இதனையடுத்து புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

    இவர் இதற்கு முன் நம்பியூரில் தாசில்தாராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை சென்னி மலை ரோடு விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் திருப்பூரில் தனியாக கம்பெனி நடத்தி வருகிறார்.

    இவர் தனது மாமனாரின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து சேகர் மட்டும் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் தங்க செயின் உள்பட மொத்தம் 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் அதே பகுதி யை சேர்ந்தவர் துர்க்கைராஜ் என்பவர் பழனி கீரனூர் சென்றார். இதையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்திரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    ஒரே பகுதியில் 2 வீடுகளில் நகை கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • மழையால் சென்னிமலையில் மலை பகுதி பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.
    • பக்தர்கள் வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை வனப்பகுதி 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மலை முற்றிலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடந்த 3 மாதங்களாக கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் மலை பகுதியில் உள்ள மரங்கள் எல்லாம் வாடி இலைகள் உதிர்ந்து வறண்டு கிடந்தது. இதனால் சென்னிமலை மலையினை பார்த்தால் வறண்ட பாலைவனம் போல் ஆங்காங்கே பாறைகள் தெரிய கிடந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த மழையால் சென்னிமலையில் மலை பகுதியில் இருந்த மரம், செடி, கொடிகள் நன்கு துளிர் விட்டு செழித்து வளர்ந்துள்ளதால் தற்போது பார்பதற்கு மலை பச்சை பசேல் என பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.

    சென்னிமலை முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் தற்போது மலையின் வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    இதில் மான்களும், குரங்குகளும், மயில்களும், முயல்களும், பல ரக பறவைகளும் குதூகளித்து விளையாடுவது பொதுமக்களை மேலும் பரவச படுத்துகிறது.

    • பிரதீப் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.
    • உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த புள்ளப்பநாயக்கன் பாளையம் வேட்டுவன் புதூர் ரோடு, காந்தி வீதியை சேர்ந்தவர் பிரதீப் (27). இவர் டிராக்டர் ஓட்டும் வேலை செய்து கொண்டு, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கோபால் தோட்டத்தில் உள்ள 12 அடி ஆழம் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டி அருகே வந்த போது பிரதீப் அந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த கோபால் பிரதீபின் உறவினர்களுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் வந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடந்த பிரதீப் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் பிரதீப் குளிக்க சென்ற போது எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து? நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.37 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. அதேநேரம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீன் பிடிப்பு பகுதியில் மழை செய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.37 அடியாக உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 594 கனஅடி வீதம் தண்ணீர் வந்த நிலையில் இன்று 1,084 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, குட்டப்பட்டி அருகே உள்ள தண்ணீர் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 29). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் துரைக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதற்கு முன் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியதால் அதற்காக சம்பவத்தன்று காலை துரை, அவரது தாய் புஷ்பா, ஜோதிடர் மற்றும் அவரது உறவினர் வைத்தியநாதன் ஆகியோர் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.

    பின்னர் பரிகார பூஜைகள் செய்து விட்ட பின்னர் தாயையும், ஜோதிடரையும் பஸ் ஏற்றி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் துரை ஓட்ட அவரது உறவினர் வைத்தி யநாதன் (31) பின்னால் அமர்ந்து கொண்டு பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    சுமார் 12 மணியளவில் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை அடுத்துள்ள மீன் பண்ணை அருகே சென்றபோது துரை அணிந்திருந்த ஹெல்மட்டை கழற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த வைத்தியநாதன் லேசான காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே துைர இறந்து விட்டதாக தெவித்தார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருமணத்திற்காக பரிகாரம் செய்ய சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே ஹெல்மெட்டை கழட்டி யதால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.
    • கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி மூன்றோடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி நாயக்கர். விசைத்தறி தொழில் செய்து வருகி ன்றார். இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட துண்டு களை அந்தியூரில் விற்பனைக்கு கொண்டு சென்று விட்டு ஒலகடம் வழியாக பவானி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒலகடம் பேரூராட்சி செல்லும் வீதியின் முன்பு கார் வந்த கொண்டிருந்த போது கார் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது. இதனையடுத்து வீட்டு சிலிண்டரை கொண்டு காரின் பேட்டரி உதவியுடன் சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.

    அப்போது அருகில் இருந்த ரங்கசாமி நாயக்கர் கார் தீப்பிடிப்பதை கண்டு அங்கிருந்து சிறிதுரம் நகர்ந்து நின்றார். உடனடி யாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு நிலைய வாகனம் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் ரங்கசாமி நாயக்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியினார்.

    இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இதனால் ஒலகடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.
    • யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக அலுவ லகத்தில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023-க்கான பயிற்சி சத்திய மங்கலம், புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோ ட்டம் ஆகிய பயிற்சியாளர்களை கொண்டு

    அந்தியூர் பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி மற்றும் சேலம் வனக்கோட்டம் மேட்டூர் வனச்சரக வனப்ப ணி யாளர்கள் உள்ளிட்டர்களுக்கு யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.

    அதன் வழித்தடங்களை ஆய்வு செய்து கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    • கோழி பண்ணை அருகே மர்ம விலங்கு ஒன்று தோட்டப்பகுதியில் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    • வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் சிறுத்தை? போன்ற வனவிலங்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்க ர்பாளையம் வினோபா நகர் அருகில் செந்தில்குமார் என்பவர் தனது விவசாய தோட்டத்தில் பண்ணை அமைத்து கோழிகள் மற்றும் வாத்துகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் தோ ட்டத்தில் வளர்க்கப்பட்ட வாத்து ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை யடுத்து நேற்று மதியம் விவசாய தோட்டத்தில் உள்ள பண்ணையில் கோழிகள் மற்றும் வாத்து களுக்கு செந்தில்குமார் தீனி வைக்க சென்றுள்ளார். அப்போது கோழி பண்ணை அருகே மர்ம விலங்கு ஒன்று தோட்டப்பகுதியில் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இது குறித்து செந்தில்கு மார் டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்து றையினர் செந்தில்குமார் தோட்டத்திற்கு சென்று மர்ம விலங்கு குறித்து விசாரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    கோழி பண்ணை மற்றும் தோட்டத்தை சுற்றிலும் கால் தடங்கள் உள்ளதா? எனவும், மர்ம விலங்கின் நடமா ட்டத்தின் அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு குறித்து கண்டறிய அப்பகுதியில் 3 தானியங்கு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வனத்து றையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    விவசாய தோட்டம் உள்ள இடம் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் சிறுத்தை? போன்ற வனவிலங்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    • ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலை மையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வீரப்பன்சத்திரம் கருப்பன் தெருவை சேர்ந்த சுதர்சன் (21), பெரியேசேமூர் பகுதி சேர்ந்த விக்னேஷ் (26), சூளை பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் (24), அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (25), வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களிட மிருந்து 86 போதை மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை யடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட னர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படு த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். 

    • கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரிகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
    • தகவல் தெரிவிப்பவர்கள் பெயர், விபரங்கள் உள்ளிட்டவைகள் ரகசியம் காக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் செட்டியார் குப்பம் பகுதியில் கடந்த 3 நாட்க ளுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் வரை இறந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    இதையடு த்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 1,558-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி. சைலே ந்திரபாபு தெரிவித்து ள்ளார்.

    இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மதுவிலக்கு அமலாக்கபிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகின்ற னர்.

    வரப்பா ளையம், கடத்தூர், பங்களாப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் நடத்திய ரெய்டில் 4 பேர் கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்ப ட்டுள்ள தோடு 100 லிட்டர் கள்ளச்சா ராயம் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளது.

    மேலும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரிகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. பவித்ரா கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராயம், சட்டவி ரோத மதுவிற்பனை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

    மதுவிலக்கு அமலா க்கபிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் தங்களது பகுதியில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்ப னையில் ஈடுபடுபவர்கள் குறித்து 9003681542 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    தகவல் தெரிவிப்பவர்கள் பெயர், விபரங்கள் உள்ளிட்டவைகள் ரகசியம் காக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×