என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கால்பந்து
உலக கோப்பை மகளிர் கால்பந்து: அர்ஜென்டினா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் 'டிரா'
- அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது.
- 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.
டுனிடின்:
9-வது உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.
நியூசிலாந்தில் உள்ள டுனிடினில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் 'ஜி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.
அர்ஜென்டினா தரப்பில் சோபியா பிரான் (74-வது நிமிடம்), ரோமினா நுனாஸ் (79) ஆகியோரும், தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிண்டா மொதாலோ (30-வது நிமிடம்), ககட்லனா (66) ஆகியோரும் கோல் அடித்தனர். 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.
அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதே போல தென்ஆப்பிரிக்கா 1-2 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோற்றது.
இன்று நடைபெறும் மற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் ('ஜி' பிரிவு), இங்கிலாந்து-டென்மார்க், சீனா-ஹைதி ('டி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.