என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
- முதல் 3 வீரர்களில் யாரோ ஒருவர் சதமடிக்க போகிறார் என என் உள்ளுணர்வு சொல்கிறது என பாஃப் என்னிடம் கூறினார்.
ஐபிஎல் தொடரின் 65-வது லீக் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 19.2 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் நான் இன்று சதம் அடிப்பேன் என்று அணியின் கேப்டன் பாஃப் முன்பே என்னிடம் தெரிவித்தார் என விராட் கோலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் பேட்டிங் செய்ய தொடங்குவதற்கு முன்பு பேட்டிங் வரிசையில் உள்ள முதல் 3 வீரர்களில் யாரோ ஒருவர் சதமடிக்க போகிறார் என என் உள்ளுணர்வு சொல்கிறது என பாஃப் என்னிடம் கூறினார். அது நீங்கள்தான் என நான் கூறினேன். அதற்கு இல்லை நீங்கள்தான் என்றார். அதுபோலவே நானும் சதம் விளாசினேன்.
என விராட் கோலி கூறினார்.
- சென்னை அணிக்கு எதிராக நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் புதிய சீருடை அணிந்து களம் இறங்க உள்ளது.
- இந்த தொடரில் இதற்கு முன்னதாக மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன.
டெல்லி:
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16வது ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 65 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நாளை டெல்லியில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை களம் இறங்க உள்ளது.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான நாளை நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய சீருடை அணிந்து ஆட உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தொடரில் இதற்கு முன்னதாக மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன. லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் புதிய சீருடையுடன் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கோலி, சிராஜ், பார்னல் ஆகியோர் ரொனால்டோவை போல வெற்றியை கொண்டாடினர்.
- ஐதராபாத் அணியின் இளம் வீரர்கள் பலரும் கோலியிடம் ஆட்டோகிராஃப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதத்தால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல பெங்களூரு அணிக்கு வாய்ப்புக்கு உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி சதம் அடித்த போது ரசிகர்கள் அனைவரும் கொண்டினர். அப்போது ஆர்சிபி வீரர்கள் விராட் கோலி நோக்கி தலை வணங்கி கொண்டாடினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டிக்கு பின் விராட் கோலி ஐதராபாத் அணியின் இளம் வீரர்களுடன் சிறிது நேரம் செலவிட்டார். கிட்டத்தட்ட டோனியை போலவே எதிரணியின் இளம் வீரர்களுடன் செலவிடுவதை கோலி வழக்கமாக கொண்டுள்ளார். நேற்றும் ஐதராபாத் அணியின் இளம் வீரர்கள் பலரும் கோலியிடம் ஆட்டோகிராஃப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் விராட் கோலி அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.
King Kohli giving autograph to SRH youngsters#SRHvsRCB #SRHvRCB #RCBvsSRH #RCBvSRH #IPLPlayOffs #IPL2023 #ViratKohli #FafDuPlesis #SunrisersHyderabad #Markram #ViratKohli? #GOAT? #6thIPL #RoyalChallengersBangalore #Haarcb #Klaasen #PlayBold #Bhuvi pic.twitter.com/2ffmkTcc6y
— Sumit Mukherjee (@Who_Sumit) May 18, 2023
மேலும் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆர்சிபி அணியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே விராட் கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் ரொனால்டோவின் தீவிர ரசிகர்கள் என்று அறிவித்துள்ள நிலையில், ஆர்சிபி அணியின் பார்னல்லும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
இவர்கள் மூவரும் இணைந்து ரொனால்டோவின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஆர்சிபி ஓய்வறையில் செய்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விராட் கோலி 6 சதங்களையும் பெங்களூரு அணிக்காக மட்டுமே அடித்துள்ளார்.
- சேசிங் செய்யும் போது 2 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 65வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இந்த போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 2019-க்குப்பின் அவர் சதம் அடித்துள்ளார். சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில், விராட் கோலி தலா 6 சதங்கள் அடித்து முதல் இடத்திலும் ஜோஸ் பட்லர் 5 சதங்கள் விளாசி 2-வது இடத்திலும் உள்ளார்.
விராட் கோலி 6 சதங்களையும் பெங்களூரு அணிக்காக மட்டுமே அடித்துள்ளார். அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார்.
அந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். பெங்களூருவுக்காக 6 முறை அடித்துள்ளார். 2-வது இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். 5 பெங்களூருவுக்காகவும் 1 பஞ்சாப்புக்காகவும் அடித்துள்ளார். ராஜஸ்தானுக்காக 5 சதங்கள் விளாசிய ஜோஸ் பட்லர் அடுத்த இடத்தில் உள்ளார்.
மேலும் சர்வதேசம் மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மா மற்றும் ராகுல் சாதனை உடைத்து விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.
அந்த பட்டியல்: 1. விராட் கோலி : 7* 2. ரோகித் சர்மா : 6 3. கேஎல் ராகுல் : 6
ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும் போது 2 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் வீரேந்திர சேவாக், பால்வல்தாட்டி, தேவ்தூத் படிக்கல், அம்பத்தி ராயுடு, ஷிகர் தவான் ஆகியோர் தலா 1 சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
மேலும் 2011, 2013, 2015, 2016, 2018, 2023* ஆகிய 6 சீசன்களில் முறையே 557, 634, 505, 973, 530, 538* என 500-க்கும் மேற்பட்ட ரன்களை விராட் கோலி அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 500+ ரன்கள் அடித்த இந்திய வீரர் (6) என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் ராகுல் கேஎல் 5 முறை மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சிக்ஸருடன் சதமடித்த வீரர் (3) என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஹாசிம் அம்லா 2 முறை சிக்ஸருடன் சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.
- சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
- மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.
ஐதராபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கிளாஸனின் அதிரடியான சதம் காரணமாக 186 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி விராட் கோலியின் சதம் காரணமாக 19.2 ஓவர்களில் வெற்றியை பதிவு செய்தது. சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தனது வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மனைவியே முக்கியக் காரணம் என்று விராட் கோலி கூறுவார்.
அந்த வகையில் மிகமுக்கியமான சதத்தை விளாசிய பின் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
- ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 18 குறித்த சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளது.
- ஏழு வருடங்களுக்கு முன் 2016, மே 18-ல் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கோலி சதமடித்திருந்தார்.
ஐதராபாத்:
பொதுவாக ஒவ்வொரு நம்பருக்குப் பின்னும் ஒரு கதை இருக்கும். கோலியின் கதை சற்று வித்தியாசமானது. சச்சினும் டோனியும் ஜெர்சி நம்பரை அவர்களே தேடிக் கொண்டார்கள். ஆனால் நம்பர் 18 விராட்டை தேடி வந்தது. அவர் கேட்காமலே நம்பர் 18 ஜெர்சி வழங்கப்பட்டது. பின்னாளில் அந்த நம்பரே அவர் வாழ்வில் முக்கிய நாட்களாகவும் மாறிப் போனதாக கோலியே கூறியிருக்கிறார். ஆம், கோலி இந்திய அணிக்காக முதன்முதலில் ஆடிய நாள் ஆகஸ்ட் 18, 2008. கோலியின் உயிருக்கு உயிரான தந்தை காலமானது டிசம்பர் 18, 2006.
இந்நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 18 குறித்த சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளது. நேற்றைய தேதி மே 18. ஐதராபாத்துடன் ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டி. 187 என்ற சற்று கடினமான இலக்கு. ஆர்சிபி பிளேஆப் செல்ல கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி வேறு. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 18 ஓவரில் சதம் அடித்து அந்த ஓவரிலேயே அவுட்டும் ஆனார். 18-ம் தேதியில் 18-வது ஓவரில் 18-ம் நம்பரின் சதம் என பதிவிட்டு ரசிகர்கள் கோலியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சரியாக ஏழு வருடங்களுக்கு முன் 2016, மே 18-ல் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கோலி சதமடித்திருந்தார். அன்று நடந்த அதே மேஜிக் நேற்றும் நடந்திருப்பதாகவும் கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
- இந்திய அணி தரப்பில் சஞ்சிதா குமாரி (29-வது நிமிடம்), ஷர்மிளா தேவி (40-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.
- இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
அடிலெய்டு:
ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.
பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணியில் ஐஸ்லிங் உட்ரி 21-வது நிமிடத்திலும், மாட்டி பிட்ஸ்பாட்ரிக் 27-வது நிமிடத்திலும், அலிஸ் அர்னோட் 32-வது நிமிடத்திலும், கோர்ட்னி ஸ்கோனெல் 35-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சஞ்சிதா குமாரி (29-வது நிமிடம்), ஷர்மிளா தேவி (40-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
- வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை.
- நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. ஐதராபாத் அணி நிர்ணயித்த 187 ரன் இலக்கை பெங்களூரு 19.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து எடுத்தது.
விராட் கோலி சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 12 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும். இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
This season wouldn't have been complete without a Virat Kohli hundred.#SRHvsRCB #SRHvRCB #RCBvsSRH #RCBvSRH #IPLPlayOffs #IPL2023 #ViratKohli #KapilDev #FafDuPlesis #SunrisersHyderabad #KingKohli #RoyalChallengersBangalore #Haarcb #Klaasen #PlayBoldpic.twitter.com/ErpsTYHJ1a
— Sumit Mukherjee (@Who_Sumit) May 18, 2023
ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியதாவது:-
முக்கியமான ஆட்டத்தில் நான் சதம் அடித்து இருப்பது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. நாங்கள் நல்ல தொடக்கத்தை அளிக்க விரும்பினோம். ஆனால் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுப்போம் என்று எதிர் பார்க்கவில்லை.
டுபிளசிஸ் வேறு ஒரு அளவில் சிறப்பாக விளையாடி வருகிறார். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. வலைப்பயிற்சியில் பந்துகளை அடிப்பதுபோல் போட்டியில் அடிக்கவில்லை.
இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன். இன்றைய ஆட்டத்தில் அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எப்போதும் ரன் கணக்குக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
சில சமயங்களில் பெரிய இன்னிங்சை விளையாடியதற்கும் பெருமைப்பட்டு கொள்ளமாட்டேன். நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.
நான் வித்தியாசமான ஷாட்டுகளை ஆட விரும்பவில்லை. ஒரு ஆண்டில் 12 மாதங்களிலும் விளையாடுகிறோம். இதில் வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை. எப்போதுமே எனது கிரிக்கெட் யுக்திகளுக்கு உண்மையாக இருந்து அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்.
டுபிளசிசும் நானும் விளையாடுவதை பார்க்கும் போது டிவில்லியர்சும் நானும் விளையாடுவது போல் எனக்கு தெரிகிறது.
இங்கு (ஐதராபாத்) ரசிகர்கள் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்தனர். சொந்த மண்ணில் விளையாடியது போல் இருந்தது. நான் விளையாடும் போது மக்கள் சந்தோஷப்படுவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் மெத்வ தேவ் (ரஷியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்)-கஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதுகிறார்கள்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் குடர்மெடோவா (ரஷியா)-அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), ரைபகினா (கஜ கஸ்தான்)-ஆஸ்டா பென்கோ (லாத்வியா) மோதுகிறார்கள்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரில் இன்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கோரிக் (குரேஷியா) மோதினர். இதில் சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் மெத்வ தேவ் (ரஷியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்)-கஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் குடர்மெடோவா (ரஷியா)-அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), ரைபகினா (கஜ கஸ்தான்)-ஆஸ்டா பென்கோ (லாத்வியா) மோதுகிறார்கள்.
- இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- இந்த வீடியோ 21 மில்லியன் பார்வைகளையும் 1.4 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஒரு சிறுவனின் அபாரமான பேட்டிங் திறமை ஆன்லைனில் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவை ராசா மஹர் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் சிறுவன் ஒரு பந்தை கூட பின்னால் விடாமல் அடித்து நொறுக்கிறார். நாலாபுறமும் பந்தை பறக்கவிடுகிறார். சூர்யகுமார் யாதவ் மாதிரி கையை சுழற்றி விளாசிகிறார். இதில் சில ஹெலிகாப்டர் ஷாட்டுகளும் அடங்கும்.இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
"பவர் ஹிட்டிங்" என்ற தலைப்புடன், இந்த வீடியோ 21 மில்லியன் பார்வைகளையும் 1.4 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது. மேலும் நெட்டிசன்களின் பல கருத்துக்களுடன். ஒரு பயனர் எழுதினார், "சிறிய குண்டு, பெரிய குண்டுவெடிப்பு." ராஜஸ்தான் ராயல்ஸின் ஐபிஎல் அணியில் ரியான் பராக்கை மாற்றலாம் என்று சிலர் பரிந்துரைத்தனர். மற்றொருவர் சூர்யாவை ஒத்திருப்பதாகக் கூறினார். "எதிர்கால பேட்டுக்கு நல்வாழ்த்துக்கள் என கருத்துக்களை தெரிவித்தனர்.
ராசா மஹர், தனது இன்ஸ்டாகிராமில் 29 ஆயிரத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். மேலும் திறமையான சிறுவன் அவரது மருமகன் ஆவார். ராசா தனது மருமகனின் நம்பமுடியாத பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் பல வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.
- இத்தலம், “ஸ்ரீ காலஹஸ்தி” என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது.
- “ஸ்ரீ” என்பது சிலந்தியை குறிக்கிறது. “கால” என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் “ஹஸ்தி” என்பது யானையை குறிக்கிறது.
திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்கபடுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.
இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒருநாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடைவிடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.
மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவபெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒருநாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.
இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களைகளையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது.
ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து, அதை இந்த தலத்தில் உள்ள சிவபெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவலோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்றபடுகிறார்.
இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:
நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)
ஆகாயம் - சிதம்பரம் கோவில்
நீர் - திருவானைக்காவல் கோவில்
நெருப்பு - திருவண்ணாமலை கோவில்
"மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.
"ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு.
இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜகோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்கபடும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்கபட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!.
இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது.
கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
ஓம் நம சிவாய!...
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.
- புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 2-வது இடத்தில் உள்ளது.
16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், அடுத்த சுற்றான பிளேஆஃப் வருகிற செவ்வாய் கிழமை (மே.23) முதல் தொடங்குகிறது. இந்த பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் தகுதி பெற்றுளளது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் வரும் 20-ந் தேதி மோதுகிறது. அந்த போட்டியில் கொல்கத்தாவை சேர்ந்த ஏடிகே மோகன் பகான் கால்பந்து கிளப் அணி நிற ஜெர்சியை அணிந்து லக்னோ அணி விளையாடவுள்ளது.
நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற மோகன் பகான் அணியை பெருமைப்படுத்தும் விதமாக அந்த நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளனர். இதனை இவ்விரு அணிகளின் நிறுவனரான சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்