என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளின் பற்களை சீரமைத்தல்
- பற்களை முறையாக சுத்தம் செய்யவேண்டும்.
- தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.
முகத்திற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் பற்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதை எப்படி பாதுகாப்பது என தெரிந்துகொள்வோமா...? முக அழகை அதிகரிப்பதில் பற்கள் முக்கியமானவை. சீரற்ற பல்வரிசையால் மனதளவில் பாதிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர்.
பற்களின் அமைப்பை குழந்தைப் பருவத்திலிருந்தே சீரமைக்கத் தொடங்கினால் எளிதாக இருக்கும். குழந்தைகளுக்கு 8 முதல் 15 வயதிற்குள் பற்களை சீரமைப்பது சிறந்தது. இந்த வயதில், பற்கள் விழுந்து முளைக்கும் என்பதால், குறைந்த காலத்தில் பற்களை சீரமைக்கலாம்.
குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்யவேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.
சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு சிறு வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால், அவர்களது முக அமைப்பே மாறிவிடுகிறது. இதற்குக் காரணம், குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே.
பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில், பற்கள் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருக்கின்றன. பற்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன.
எனவே, 4 வயதுக்கு மேல் குழந்தைகள் இந்த பழக்கத்தைத் தொடர அனுமதிக்கக்கூடாது. பல் துலக்கும்போது பலரும் தெரியாமலேயே தவறு செய்கிறார்கள். அது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறப்பதுதான்.
ஈறுகளுக்கும், பற் களுக்கும் இடையில் உள்ள சின்ன இடை வெளிகளில், நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தங்குவதால்தான் ஈறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஈறுகளை எப்படி பாதுகாப்பது என்பதை பல் மருத்துவர்கள் மூலம் அறிந்து, அதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், பிற்காலத்தில் பல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.