search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று அறிகுறிகள்
    X

    குழந்தைகளை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று அறிகுறிகள்

    • குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்காது.
    • வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    சிறுநீர் பாதை தொற்று என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பச்சிளம் சிசுக்களுக்கும் கூட ஏற்படுகிறது. சிறுநீர் பாதையில் பாக்டீரியாவால் ஏற்படுகின்ற தொற்றுதான் இது.

    சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர் பாதை தொற்று சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது இந்நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது.

    இளம் குழந்தைகள் மற்றும் பச்சிளம் சிசுக்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும்போது உணர தகுந்த அறிகுறிகள் தென்படாது. தொற்றை கண்டுபிடிக்க இயலாத சூழலில், முறையான சிகிச்சை எடுக்க முடியாத நிலை ஏற்படும்.

    மலத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பிறப்பு உறுப்புக்கு அருகாமையில் உள்ள சருமத்தில் குடியிருக்கும் பாக்டீரியா ஆகியவை சிறுநீர் பாதைக்குள் நுழைவதன் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. சிறுநீர் பாதை மற்றும் சிறுநீர் பை ஆகிய பகுதிகளுக்கு இது பரவக்கூடும். மிகவும் அரிதாக சிறுநீரகம் வரையிலும் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும்.

    சரியான சமயத்தில் நோயை கண்டறிந்து ஆண்டிபயாடிக் மருந்துகள் மற்றும் இதர சிகிச்சைகளை அளிக்கும் பட்சத்தில் விளைவுகளை கட்டுப்படுத்தலாம்.

    சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, பின் இடுப்பு வலி, வயிறு வலி போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்படும்.

    குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்காது. குழந்தைகளின் பசி உணர்வை பரிசோதிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில சமயம் காய்ச்சலும் சேர்ந்து வரும்.

    குழந்தைகளுக்கான டயப்பர், மெத்தை போன்றவற்றை அடிக்கடி மாற்றி, சுத்தம் செய்ய வேண்டும். பிறப்புறுப்பு பகுதி, ஆசனவாய் பகுதி போன்ற இடங்களில் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து துடைக்க வேண்டும்.

    பிறப்பு உறுப்பு பகுதியில் அரிப்பு, மோசமான வாடை, மேக நிறத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.

    Next Story
    ×