search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சர்க்கரை நோயாளிகள் தேன் மற்றும் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?
    X

    சர்க்கரை நோயாளிகள் தேன் மற்றும் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?

    • 100 கிராம் பேரிச்சம் பழத்தில் கிட்டத்தட்ட 314 கலோரிகள் இருக்கிறது.
    • ஒரு தேக்கரண்டி தேனில் 17 கிராம் சர்க்கரை மற்றும் 64 கலோரிகள் இருக்கிறது.

    ஒரு தேக்கரண்டி தேனில் கிட்டத்தட்ட 17 கிராம் கார்போஹைட்ரேட், 17 கிராம் சர்க்கரை மற்றும் 64 கலோரிகள் இருக்கிறது. வெள்ளை சர்க்கரையின் கிளைசீமிக் இன்டக்ஸை தேனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது கிட்டத்தட்ட அதே அளவு தான் தேனிலும், சர்க்கரையிலும் இருக்கிறது. மேலும் வெள்ளை சர்க்கரையில் இருக்கக்கூடிய அதே அளவு கார்போஹைட்ரேட் தேனில் இருப்பதால் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தக்கூடும். தேனில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்கள் இருப்பதால் எப்போழுதாவது சிறிய அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

    தேனில் இருக்கும் நன்மைகளுக்காகவும் அது இயற்கையான பொருள் என்பதால் அது ஃபிட்னஸ் பிரியர்களுக்கான மாற்று வழியே தவிர சர்க்கரை நோயாளிகளுக்கு அல்ல என்கிறது.

    பேரிச்சம் பழங்களில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருப்பதாலும், அதன் கிளைசீமிக் இன்டக்ஸ் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பழங்களை சாப்பிடலாம். பேரிச்சம் பழங்களில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால், அதிகமான அளவு உட்கொள்ளக் கூடாது. முறையான உணவுப்பழக்கத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு பேரிட்சைகளை சாப்பிடலாம். இதிலிருக்கும் அதிக நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு கண்டிப்பாக தேவை.

    100 கிராம் பேரிச்சம் பழத்தில் கிட்டத்தட்ட 314 கலோரிகள் இருக்கிறது. இது மிக அதிகம். வைட்டமின் ஏ, கே, பி, மக்னீசியம், இரும்பு, தாமிரம், பொட்டாசியம், மாங்கனிசு போன்றவை இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பழங்களை சாப்பிடலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயபடிக் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    Next Story
    ×