search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சர்க்கரை நோயாளிகள் மைதா பரோட்டா சாப்பிடலாமா?
    X

    சர்க்கரை நோயாளிகள் மைதா பரோட்டா சாப்பிடலாமா?

    • மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம்.
    • பரோட்டா பொதுவாக மைதாவில் செய்யப்படுகிறது.

    மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும், சாலையோரக் கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாவது மைதா பரோட்டாதான்.

    பரோட்டா பொதுவாக மைதாவில் செய்யப்படுகிறது. மைதா என்பது கோதுமை சுத்திகரிக்கப்படும் போது அதன் தவிடு நீக்கப்பட்டு அதன் விதை கூழ் தசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    பொதுவாக தவிட்டில் தான் மெக்னீசியம், மேங்கனீஸ், இரும்புச்சத்து, செலினியம் போன்ற தனிமங்கள் இருக்கும். விதைக்கூழ் தசையில் அதிகமான மாவுச்சத்து இருக்கிறது. ஒரு கப் மைதாவில் 496 கலோரிகளும், 107 கிராம் மாவுச்சத்தும் இருக்கிறது. பரோட்டாவின் சர்க்கரை உயர்தல் குறியீடு 71 ஆகும். அதனால் பரோட்டா சாப்பிட்ட உடனே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.

    இதில் உள்ள அதிகமான அளவு மாவுச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். மேலும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து ஜீரண கோளாறுகள் ஏற்படுத்தும். மைதாவில் வெள்ளை நிறத்தை ஏற்படுத்துவதற்காகவும், அது மென்மையாக இருப்பதற்காகவும், பென்சைல் பெர் ஆக்சைடு மற்றும் அலோக்சான் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

    மைதாவில் கார்போஹைட்ரேட் 78% என்பதும் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    முக்கியமான விஷயம் மளிகைக் கடைகளுக்குள் இரவில் பிற பொருட்களை ருசி பார்க்கும் பெருச்சாளிகள் மைதா மாவைத் தொடவே தொடாதாம். ஆனால், நாம்?

    இது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். மேலும் எலிகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் அலோக்சான் சர்க்கரை நோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் மைதா பரோட்டாவை தவிர்ப்பது நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா),

    Next Story
    ×