search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து!
    X

    புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து!

    • புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம்.
    • கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம்.

    உலகின் பல்வேறு பழங்குடிகளிடமும் புகையிலை பயன்பாடு வெவ்வேறு வடிவங்களில் இருந்திருக்கிறது. இதனை போதையாக அவர்கள் கருதவில்லை. மாறாக மூலிகையாக கருதினர்.

    அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமான புகையிலை அங்கு மூச்சிரைப்பு, மலேரியா, உணவுக்குழாய் அழற்சி, மூலநோய், மன அழுத்தம் ஆகிய பாதிப்புகளுக்கு உள் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. சருமத்தில் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சிரங்கு, தோல் நோய்களில் மேற்பூச்சாக பயன்பட்டது.

    18-ம் நூற்றாண்டு வாக்கில் புகையிலையானது சுருட்டாகவும், சிகரெட்டாகவும் உருவெடுத்தது.

    புகையிலையை புகைக்கும்போது, அதில் உள்ள நிகோடின், பைரிடின், கார்பன் மோனாக்சைடு போன்றவை உடலுக்குள் செல்லும். அப்போது கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    புகையிலையை பதப்படுத்தி சிகரெட்டாக மாற்ற ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    குறிப்பாக, பல்வேறு உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. ஒரு ஆண்டில் 8 லட்சம் மக்களை புகையிலையால் வரும் பாதிப்பு மரணிக்க வைக்கிறது. இதில் ஒரு துயரம் என்னவென்றால் சிகரெட் புகைக்கும் நபரின் அருகில் இருக்கும் பெண்கள், குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான்.

    மூளையில் இருக்கும் டோபோமைன் என்ற சுரப்பு உற்சாகத்தை தூண்டக்கூடியது. அந்த சுரப்பை அதிகரித்து சற்று நேரம் உற்சாகமாக வைப்பது புகையிலையின் குணம். இந்த ஒரு சில நிமிடங்கள் அளிக்கும் உற்சாகம், சிகரெட் புகைக்கும் நபரை காலங்காலமாக அதற்கு அடிமைப்படுத்தி விடுகிறது என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.

    Next Story
    ×