search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கோடையில் உடலை குளிரவைக்கும் பெருஞ்சீரகம்
    X

    கோடையில் உடலை குளிரவைக்கும் பெருஞ்சீரகம்

    • வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
    • பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம்.

    செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும்.

    சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

    பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.

    Next Story
    ×