search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சத்துக்கள் நிறைந்த சப்போட்டா..!
    X

    சத்துக்கள் நிறைந்த சப்போட்டா..!

    • சப்போட்டாவுக்கு, பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் திறன் உண்டு.
    • சப்போட்டாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

    அளவில்லா ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்போட்டாவுக்கு, பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் திறன் உண்டு. அத்தகைய சிறப்பு கொண்ட சப்போட்டா பழத்தின் ஆரோக்கிய நலன்களைத் தெரிந்து கொள்வோம்.

    நன்மைகள்

    சப்போட்டாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். எனவே, சப்போட்டாவைத் தினமும் சாப்பிடுவது, ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தி, சமநிலையில் வைக்க உதவும்.

    சப்போட்டா பழத்தில், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் பண்புகள் மிகுந்து காணப்படுகின்றன. ஜலதோஷம், பருவகால காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்கும், ஒருவேளை பாதிப்புக்கு உள்ளானால் நம்மை மீட்பதற்கும் சப்போட்டா பயனுள்ளதாக இருக்கும்.

    சப்போட்டாவைச் சாப்பிடுவது, சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும். சிறுநீரகக் கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சப்போட்டா சிறப்பான மருந்து.

    நம் உடல்நலனுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. சப்போட்டாவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அதைச் சாப்பிடுவது நம் உடல் நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தும். நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் சப்போட்டாவைச் சாப்பிடுவது, நம் உடலுக்குப் போதிய ஆற்றலை உடனடியாக அளிக்கும்.

    அதிகம் சாப்பிடலாமா?

    சப்போட்டாவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்போ வாயில் புண்ணோ ஏற்படலாம். குறிப்பாக, நன்கு பழுக்காத பச்சையான சப்போட்டாவைத் தவிர்க்க வேண்டும். சப்போட்டாவை காயாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்பு, வாயில் புண் போன்றவற்றோடு, செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் சேர்ந்து ஏற்படலாம்.

    சப்போட்டா அல்வா, சப்போட்டா சாஸ், சப்போட்டா மில்க் ஷேக் என சப்போட்டா பழத்தைப் பல வடிவில் நாம் சாப்பிட முடியும்.

    Next Story
    ×