search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    எதிரணிக்கு குறைந்த இலக்கை நிர்ணயித்து எங்களால் வெற்றி பெற முடியும் என்பதை காட்டியுள்ளோம் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானுக்கு 224 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு 268 ரன்களும் வெற்றி இலக்காக நிர்ணயித்து அதற்குள் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை நாங்கள் காட்டிவிட்டோம் என இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து கடந்து இரண்டு ஆண்டுகளாக அபாரமாக பந்து வீசி வருகிறார். அப்புறம் முகமது ஷமி இரண்டு போட்டியில்தான் விளையாடியுள்ளார். இரண்டிலும் அசத்தியுள்ளார். நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளோம். அதேபோல் சிறந்த சுழற்பந்து வீச்சையும் கொண்டுள்ளோம்.

    பும்ரா முகமது ஷமி

    நாங்கள் அணியின் காம்பினேசனை பார்க்கிறோம். பந்து வீச்சு தாகுதலில் சிறப்பாக செயல்படுவது முக்கியமானது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 225 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். இதுபோன்ற குறைந்த ரன்னுக்குள் எதிரணியை எங்களால் கட்டுப்படுத்த முடியும்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கும் குறைவாகத்தான் எடுப்போம் என்ற நிலை இருந்தது. ஹர்திக் பாண்டியா, டோனி ஆட்டத்தில் சிறந்த ஸ்கோர் கிடைத்தது’’ என்றார்.
    முக்கியமான போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு 204 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை.
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 35-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ரபாடா வீசினார். முதல் பந்திலேயே கருணாரத்னே டு பிளிசிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து குசால் பெரேரா உடன் அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை அணி 9.5 ஓவரில் 67 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பெர்னாண்டோ 29 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து குசால் பெரேரா 34 பந்தில் 30 ரன்களில் வெளியேறினார்.

    தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் பிரிட்டோரியஸ்

    அதன்பின் இலங்கை அணியால் மளமளவென ரன்கள் சேர்க்க இயலவில்லை. குசால் மெண்டிஸ் 23 ரன்களும், மேத்யூஸ் 11 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 24 ரன்களும், ஜீவன் மெண்டிஸ் 18 ரன்களும், திசாரா பேரேரா 21 ரன்களும் அடிக்க இலங்கை 49.3 ஓவரில் 203 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் கிறிஸ் மோரிஸ், பிரிட்டோரியஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது.
    வைடு வழங்கிய அம்பயரை முறைத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான பிராத் வைட்டுக்கு 15 சதவீதம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தியா பேட்டிங் செய்யும்போது 42-வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட் வீசினார். அப்போது ஒரு பந்தை வைடு என நடுவர் தெரிவித்தார்.

    இதனால் பிராத்வைட் கோபம் அடைந்து நடுவரை நோக்கி முறைத்தார். அவரது செயல் ஐசிசி விதிமுறைக்கு எதிரானது என அவருக்கு போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
    பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவதை விரும்பாத இந்தியா, வங்காள தேசம் மற்றும் இலங்கையிடம் வேண்டுமென்றே தோற்கலாம் என முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆஸ்திரேலியா மட்டுமே முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

    பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் 5 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு போட்டியில் மழையால் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.

    இருப்பினும், கடைசியாக நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் உற்சாகமடைந்துள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தானையும், வங்காள தேசத்தையும் எதிர்கொள்கிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்.

    இந்திய கிரிக்கெட் அணி

    ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் முதன் மூன்று இடங்களை எளிதில் பிடித்துவிடும் என தெரிகிறது. நான்காவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் அணிகள் உள்ளன. மற்ற அணிகள் அடுத்து வரும் போட்டிகளில் மோசமாக விளையாடி தோற்றால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும்.

    இந்திய அணி அடுத்து இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகளை எதிர்கொள்கிறது. மூன்று அணிகளையும் இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும். இந்திய அணி இந்த மூன்று அணிகளிடம் மோசமாக தோற்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கு பாதகமாக முடியும்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை, வங்களாதேசம் அணிகளுடனான போட்டிகளில் இந்திய அணி வேண்டுமென்றே மோசமாக விளையாடி தோற்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. இந்திய அணிக்கு அடுத்ததாக வங்களா தேசம் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகள் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா எப்படி வென்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் பார்த்தோம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    அதேபோன்று அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் விளையாடினால், என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன நடந்தது? இந்தியா வேண்டுமென்றே மோசமாக விளையாடியது. இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா எப்படி விளையாடியது? வார்னர் இந்தியாவுக்கு எதிராக வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்?’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
    இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் உலகக்கோப்பைக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
    வெஸ்ட் இண்டீஸ் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடனும் (ஹோல்டர், காட்ரெல், தாம்சன், கீமர் ரோச், கேப்ரியல், அந்த்ரே ரஸல்), முன்னணி அதிரடி பேட்ஸ்மேன்களுடனும் (கிறிஸ் கெய்ல், லிவிஸ், ஹெட்மையர், பிராத்வைட், ஷாய் ஹோப்) உலகக்கோப்பை தொடரில் களம் இறங்கியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அசத்தல் வெற்றியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடுமையாக போராடி 15 ரன்னிலும் தோல்வியடைந்தது.

    முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என கருதப்பட்டது. அதன்பின் தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பு மங்கியது.

    நேற்று மான்செஸ்டரில் இந்தியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றில் பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எந்தவித போராட்டமும் இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

    அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

    இதனால் 7 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒரு போட்டியில் முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகளுடன் பரிதாபமாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அடுத்து இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்கிறது.

    இலங்கையை வீழ்த்தினால், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை பறித்துவிடும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. 

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ரோகித் சர்மா 18 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 48 ரன்னிலும், விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அரைசதம் அடித்த விராட் கோலி 82 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் எம்.எஸ்.டோனி நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 38 பந்தில் 46 ரன்கள் சேர்க்க இந்தியா 250 ரன்னைத் தாண்டியது.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது. டோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர்.

    அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னும், நிகோலஸ் பூரன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் ராசியான மஞ்சள் நிற ஜெர்சியை அணிய இலங்கை அணிக்கு அனுமதி அளித்துள்ளது ஐசிசி.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தியா, இங்கிலாந்து. இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் நீலக்கலர் ஜெர்சி அணிந்து விளையாடி வருகின்றன.

    ஐசிசி-யின் புதிய விதிமுறைப்படி இந்த நான்கு அணிகளும் நேருக்குநேர் மோதும்போது ரசிகர்கள் வீரர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக ஜெர்சியை மாற்றிக் கொள்ள வேண்டும். போட்டியை இங்கிலாந்து நடத்துவதால் அந்த அணிக்கு விதிவிலக்கு. இதனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஜெர்சியை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

    அந்த வகையில் இலங்கை மஞ்சள் நிற ஜெர்சியுடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இங்கிலாந்து எதிரான போட்டியிலும் அணிந்து விளையாடியது. இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றதால் மஞ்சள் நிறம் ராசி என இலங்கை கருதுகிறது. இதனால் அதே ஜெர்சியை தொடரில் மீதமுள்ள போட்டிகளின்போதும் அணிந்து விளையாட ஐசிசி-யிடம் அனுமதி கேட்டிருந்தது இலங்கை அணி. தற்போது இலங்கை அணிக்கு ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.

    இலங்கை தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது. மூன்று போட்டிகளிலும் வெற்றி  பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது இந்தியா ஆரஞ்சு கலர் ஜெர்சி அணிந்து விளையாடலாம் எனத் தெரிகிறது.
    மான்செஸ்டரில் நடைபெற்று வரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல் 48 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

    அடுத்து வந்த விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அரைசதம் அடித்த விராட் கோலி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், 82 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.



    விராட் கோலி ஆட்டமிழக்கும்போது இந்தியா 38.2 ஓவரில் 180 ரன்கள் எடுத்திருந்தது. ஒரு பக்கம் டோனி நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 38 பந்தில் 46 ரன்கள் சேர்க்க இந்தியா 250 ரன்னைத் தாண்டியது.

    கடைசி ஓவரில் சிக்ஸ், பவுண்டரி அடித்து 59 பந்தில் அரைசதம் அடித்தார் டோனி. கடைசி பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். இதனால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது. டோனி 61 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பைக்கு முன் சேஸிங்கில் கிங்காக விளங்கிய இங்கிலாந்து அணிக்கு, சேஸிங்கே சோதனையாக அமைந்து பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை போட்டியை நடத்தும் இங்கிலாந்து கைப்பற்றும் என விமர்சகர்கள் ஆணித்தரமாக கூறினார்கள். இதற்கு காரணம் உண்டு. இங்கிலாந்து அதன் சொந்த மைதானத்தில் உலகக்கோப்பைக்கு முன் கடந்த 19 போட்டிகளில் சேஸிங் செய்யும்போது தோல்வியை கண்டதே கிடையாது. மேலும், முதலில் பேட்டிங் செய்தால் எளிதாக 300 ரன்களை கடந்து விடும்.

    ஆனால் உலகக்கோப்பை தொடரில் தனது 2-வது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் 349 ரன் இலக்கை எட்ட முடியாமல் 14 ரன்னில் தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் தொடர் சேஸிங் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப் புள்ளி வைத்தது.

    முதல் ஐந்து போட்டிகளில் மூன்றில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சேஸிங் செய்தது.

    6-வது போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இருந்துதான் இங்கிலாந்துக்கு சோதனை ஆரம்பித்தது. இலங்கை நிர்ணயித்த 233 ரன்னை சேஸிங் செய்ய முடியாமல் 212 ரன்னில் சுருண்டது. இதனால் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

    அதன்பின் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 285 ரன்கள் சேர்த்தது. பின்னர் 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 221 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.

    அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உள்ளது என்ற நிலை உள்ளது.



    சொந்த மைதானத்தில் சேஸிங் செய்வதில் கிங்காக விளங்கியதால் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்து சிக்கலில் மாட்டியுள்ளது. இலங்கை சேஸிங் வாய்ப்பை கொடுத்தது. அதையும் செய்ய இயலவில்லை.

    எதை பலம் என்று நினைத்து களம் இறங்கியதோ, அதை அந்த அணிக்கு மிகப்பெரிய பாதகமாக முடிந்துள்ளது.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 34-வது ‘லீக்‘ ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த போட்டிக்கு முன் 416 இன்னிங்சில் 19963 சர்வதேச ரன்கள் குவித்திருந்தார்.

    37 ரன்கள் அடித்தால் விரைவாக 20 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்யலாம் என்ற நோக்கத்துடன் இன்றைய போட்டியில் களம் இறங்கினார். அவர் ஹோல்டர் வீசிய 25-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்தபோது 37 ரன்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்னைத் தொட்டர்.

    இதன்மூலம் விரைவாக 20 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி டெஸ்டில் 6613 ரன்களும் (131), 20 ஓவர் போட்டியில் 2263 ரன்களும் (62) எடுத்து உள்ளார்.

    20 ஆயிரம் ரன்னை விராட் கோலி 417-வது இன்னிங்சில் கடந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர், லாரா 453 இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்னை கடந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ் 20 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தார்.



    இந்த ரன்னை எடுத்த 3-வது இந்தியர், சர்வதேச அளவில் 12-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெறுவார்.

    தெண்டுல்கர் சர்வதேச போட்டிகள் அனைத்திலும் சேர்ந்து 34,357 ரன் எடுத்து (782 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 24,208 ரன்னுடன் (509 இன்னிங்ஸ்) 6-வது இடத்தில் உள்ளார். இவர்கள் வரிசையில் கோலியும் இணைந்துள்ளார். சங்ககரா (28,016 ரன்) 2-வது இடத்திலும், பாண்டிங் (27,483) 3-வது இடத்திலும் உள்ளனர்.
    உலகக்கோப்பை தொடரில் பவர்பிளே-யான முதல் 10 ஓவரில் இந்தியா பேட்டிங்கில் 4.32 சராசரியுடன் மிகமிக மோசமாக உள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் கோடைக்காலம் என்பதால் ஆடுகளங்கள் அனைத்தும் பிளாட்டாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன்கள் குவிப்பார்கள். ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அடித்தால் அது ஆச்சர்யமான விஷயம் கிடையாது. ஒருவேளை இங்கிலாந்து 500 ரன்னைத் தொடலாம் என்ற கருத்துக்கள் நிலவியது.

    ஆனால் அன்சீசன் மழைக்காரணமாக ஆடுகளங்கள் சற்று ஈரப்பதமாக காணப்பட்டு வருகிறது. இதனால் முதல் 10 ஓவரில் ரன்கள் குவிக்க பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.



    இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் இலங்கைதான் முதல் 10 ஓவரில் சராசரியாக 6.63 ரன்கள் அடித்துள்ளது. வங்காள தேசம் 5.48 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 5.10 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    இந்தியா 4.32 ரன்களுடன் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 5.34 ரன்களுடன் 3-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 5.14 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் 5.07 ரன்களுடன் 6-வது இடத்திலும், நியூசிலாந்து 5.02 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4.57 ரன்களுடன் 8-வது இடத்திலும் உள்ளன. தென்ஆப்பிரிக்கா 4.01 ரன்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    ரோகித் சர்மாவுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் அவுட் கொடுத்ததால் அவரது பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி நடுவரை வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 6-வது ஓவரை கேமர் ரோச் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் சிக்சரும், 4-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார் ஹிட்மேன். ஆனால் கடைசி பந்தை ரோச், ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று வெளியே குட் லெந்த் ஏரியாவில் பிட்ச் செய்தார். அதை முன்னாள் வந்து தடுத்தாட முயன்றார் ரோகித் சர்மா.

    ஆனால் பந்து பேட்டிற்கும் கால் பேடுக்கும் இடையிலோடு பின்னால் சென்று விக்கெட் கீப்பர் கைக்குள் தஞ்சம் அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்பீல் கேட்டனர். ஆனால் மைதான நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரிவியூ கேட்டனர். ரீபிளேயில் பந்து பேட்டையும், பேடையும் ஒருசேர உரசிச் சென்றது போன்று அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் தெரிந்தது. இதுபோன்ற நேரத்தில் மைதான நடுவர் என்ன முடிவு எடுக்கிறாரோ? அதைத்தான் 3-வது நடுவர் எடுப்பார்.



    ஆனால் ரோகித் சர்மா விவகாரத்தில் 3-வது நடுவர் நீண்ட நேரம் அந்த காட்சியை வெவ்வேறு கோணத்தில் இருந்து ரீபிளே செய்யாமல் அவுட் கொடுத்தார். இதனால் ரோகித் சர்மா ஏமாற்றத்துடன் வெளியேறினார். போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவியும் விரக்தியடைந்தார்.

    இதனால் கோபம் அடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள் டுவிட்ரில் #RohitSharma ஹேஷ்டேக் உருவாக்கி 3-வது நடுவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
    ×