search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 1992-ம் ஆண்டு தொடருடன் ஒப்பிடுவது குறித்து சிந்திக்கவில்லை என்று பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்ததும், லீக் சுற்று ஆட்டங்கள் சூடுபிடித்தன.

    பாகிஸ்தான் தொடக்கத்தில் சரிவை சந்தித்தது. அதன்பின் சில வெற்றிகள் பெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டது.

    1992 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு லீக் ஆட்டத்தில் என்ன ரிசல்ட் கிடைத்ததோ? அதே ரிசல்ட் தற்போதும் கிடைத்துள்ளது. தோல்வியடையாமல் வந்த நியூசிலாந்தை நேற்று வீழ்த்தியது.

    இதனால் 1992-ல் அரையிறுதிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வென்றதுபோல் தற்போதும் பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த பாபர் ஆசம் அப்படி நினைக்கவில்லை. அவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘1992-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றித் தோல்வி முடிவுகளுடன், தற்போதைய உலகக்கோப்பை தொடரின் முடிவுகளை ஒப்பிட்டு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

    ஆனால், நாங்கள் 1992 உலகக்கோப்பையுடன் ஒப்பிடுவதை பற்றி சிந்திக்கவில்லை. இந்தத் தொடரில் எங்களுக்கு இருக்கும் போட்டிகள் அனைத்து வாழ்வா? சாவா? போன்றது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம்.



    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கிடைத்த சதம் என்னுடைய சிறந்த சதங்களில் ஒன்று. ஏனென்றால் கட்டாயம் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியில் கிடைத்தது. போட்டிக்கு முன் பெர்குசனை சிறந்த வகையில் ஆட வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தோம்.

    ஆனால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், சான்ட்னெரை எதிர்த்து கவனமாக விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாங்கள் இங்கிலாந்தில் விளையாடும்போதெல்லாம் ரசிகர்கள் அதிக அளவில் வருகை வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து நீடிப்பதால் நான் பெருமையடைகிறேன்’’ என்றார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை சாய்த்து வருகின்றனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவற்கு முன் ஆல்ரவுண்டர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கான தொடராகத்தான் இருக்கும். பந்து வீச்சாளர்கள் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், இங்கிலாந்தில் திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்ததால், ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது, குறிப்பாக முதல் 15 ஓவரில் ஆதிக்கம் செலுத்தினர்.

    இந்த உலகக்கோப்பை தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 7 ஆட்டத்தில் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவர் இரண்டு முறை நான்கு விக்கெட்டுக்களும், ஒரு முறை ஐந்து விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

    பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அமிர் 6 ஆட்டத்தில் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு முறை ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். வங்காள தேச அணியின் முஷ்டாபிஜூர் ரஹ்மான் 6 போட்டியில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் 6 போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் 6 போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஷாகிப் அல் ஹசன் 6 பேட்டியில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் ஒருமுறை ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.

    வலது கை வேகப்பந்து வீச்சாளர்களில் இங்கிலாந்தில் ஜாபர் ஆர்சர் 16 விக்கெட்டும், நியூசிலாந்தின் பெர்குசன் 15 விக்கெட்டும், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 13 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
    ஓல்டு டிராபோர்டில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார். இதனால் மாற்றம் ஏதுமில்லை.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. விஜய் சங்கர், 5. கேதர் ஜாதவ், 6. எம்எஸ் டோனி, 7 ஹர்திக் பாண்டியா, 8. சாஹல், 9. குல்தீப் யாதவ், 10. முகமது ஷமி, 11. பும்ரா.
    வீரர்களின் கூட்டு முயற்சியால் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார்.
    பர்மிங்காம்:

    உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்து நியூசிலாந்து முதல் தோல்வியை தழுவியது.

    பர்மிங்காமில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்னே எடுக்க முடிந்தது. ஜேம்ஸ் நீசம் 97 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), கிராண்ட்ஹோம் 64 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 41 ரன்னும் எடுத்தனர். சகீன்ஷா அப்ரிடி 3 விக்கெட்டும், முகமதுஅமீர், சதாப்கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி பாபர் ஆசாமின் சதத்தால் வெற்றி பெற்றது. அந்த அணி 49.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழத்தியது.

    பாபர் ஆசம் 127 பந்தில் 101 ரன்னும் (11 பவுண்டரி), ஹாரிஸ் சோகைல் 68 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். போல்ட், பெர்குசன், காலின் முன்ரோ தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    பாகிஸ்தான் அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி அரை இறுதிக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது. 7 புள்ளியுடன் அந்த அணி 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

    வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்ததாக பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மிகவும் கடுமையாக விளையாடி இந்த வெற்றியை பெற்றோம். வீரர்களின் கூட்டு முயற்சி வெற்றிக்கு காரணமாக இருந்தது. அனைத்து பந்து வீச்சாளர்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    பாபர் ஆசம், சோகையில் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. நான் பார்த்த சிறந்த பேட்டிங் இதுவாகும். 238 ரன் கடினமான இலக்கு என்பது தெரியும். இதனால் 50 ஓவர் வரை ஆடுவது என்று விரும்பினேன். ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு பாபரும், ஹாரிசும் பொறுப்புடன் ஆடினர்.

    அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நியூசிலாந்து அணி முதல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “பாகிஸ்தான் எல்லா வகையிலும் எங்களைவிட சிறப்பாக செயல்பட்டது. பாபர் ஆசரும், சோகையிலும் ‘பிட்ச்‘ தன்மைக்கு ஏற்றுவாறு ஆடினார்கள்” என்றார்.

    பாகிஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 29-ந்தேதியும், நியூசிலாந்து அணி அதே தினத்தில் ஆஸ்திரேலியாவையும் சந்திக்கின்றன.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் இருவரின் அதிரடியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கப்தில் 5 ரன் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அமிர் உடன் இணைந்து பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி துல்லியமாக பந்து வீச கொலின் முன்றோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லாதம் (1) அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 46 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.



    5-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை நிலைநிறுத்த போராடியது. ஆனால் அணியின் ஸ்கோர் 83 ரன்னாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    6-வது விக்கெட்டுக்கு நீஷம் உடன் கொலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து 47.4 ஓவரில் 215 ரன்கள் எடுத்திருக்கும்போது கிராண்ட்ஹோம் 71 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது.



    நீஷம் கடைசி வரை நின்று போராட நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்தது. நீஷம் 112 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் அமிர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் களம் இறங்க ஆட்டம் வெற்றி பாதையை நோக்கி பயணித்தது.  ஆனால் ஆட்டத்தின் 2.6 வது ஓவரில் பெர்குசன் வீசிய பந்தில் பஹார் ஜமான் 9 (10) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அதனையடுத்து பாபர் அசாம் களம் இறங்க ஆட்டம் சூடுபிடித்தது.  இதனிடையே ஆட்டத்தின் 10.2வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இமாம் உல்-ஹக் 19 (29) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஹபீஸ் 50 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  ஆட்டத்தின் 26.2 வது ஓவரில் பாபர் அசாம் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.



    அடுத்த களம் இறங்கிய பாக். அணி வீரர் ஹாரிஸ் சோகைல், பாபர் அசாமிற்கு துணையாக நின்று ரன்களை குவிக்கத் தொடங்கினர். ஆட்டத்தின்  41.5 வது ஓவரில் 3 விக்கெட்களை மட்டும் இழந்த பாக். ஜோடி 200 ரன்களை கடந்தது.  ஆட்டத்தின் 44.3 வது ஓவரில் சோகைல் அரை சதத்தை கடந்தனர்.  இருவரின் ஜோடியை பிரிக்க எண்ணிய நியூசிலாந்து அணி வீரர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.  இதனிடையே ஆட்டத்தின் 47.3 வது ஓவரில் பாபர் அசாம் தனது சதத்தை பதிவு செய்தார்.    ஹாரிஸ் சோகைல் 68(76) ரன்கள் கடந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இதன் மூலம்  ஆட்டத்தின் 49.1 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 241 ரன்கள் எடுத்தது.  முடிவில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணி தரப்பில் அதிக பட்சமாக பாபர் அசாம் 101 (127), முகமது ஹபீஸ் 32 (50), ஹாரிஸ் சோகைல் 68 (76) ரன்களை எடுத்தனர்.

    நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், பெர்குசன், வில்லியம்சன்  தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.
    ஜேம்ஸ் நீசம், கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கப்தில் 5 ரன் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அமிர் உடன் இணைந்து பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி துல்லியமாக பந்து வீச கொலின் முன்றோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லாதம் (1) அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 46 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

    கிராண்ட்ஹோம்

    5-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை நிலைநிறுத்த போராடியது. ஆனால் அணியின் ஸ்கோர் 83 ரன்னாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    6-வது விக்கெட்டுக்கு நீஷம் உடன் கொலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து 47.4 ஓவரில் 215 ரன்கள் எடுத்திருக்கும்போது கிராண்ட்ஹோம் 71 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது.

    நீஷம் கடைசி வரை நின்று போராட நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்தது. நீஷம் 112 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் அமிர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஷாஹீன் அப்ரிடி

    பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. 1992 உலகக்கோப்பையில் நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாகிஸ்தான்தான். அந்த வரலாற்றை இன்று நியூசிலாந்து மாற்றி எழுதுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
    உலகக்கோப்பை தொடர்தான் என்னுடைய கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும் என்று கூறியிருந்த கிறிஸ் கெய்ல், அதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் தற்போது அவரது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். உலகக்கோப்பை தொடர் உடன் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வராது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிவிற்கு வரவில்லை. நான் இன்னும் சில போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. இன்னும் ஒரு தொடரில் விளையாட வாய்ப்புள்ளது. யாருக்த் தெரியும். என்ன நடக்க இருக்கிறது என்பதை நாம் பார்ப்போம்.



    உலகக்கோப்பை தொடருக்குப்பின் என்னுடைய திட்டம் என்ன என்று கேட்கிறீர்கள். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒருவேளை விளையாடலாம், அப்புறம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கட்டாயம் விளையாடுவேன். டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடமாட்டேன். உலகக்கோப்பை தொடருக்குப்பின் என்னுடயை திட்டம் இதுதான்’’ என்றார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மிகவும் மெதுவாக ஆடியதாக விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவாக கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 28-வது லீக் ஆட்டத்தின்போது எம்எஸ் டோனி 52 பந்துகள் சந்தித்து 28 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து போட்டியில் மிகவும் மந்தமாக ஆடியதாக டோனி மீது கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிபடுத்தினர்.

    இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கரும், டோனி விளையாடிய விதம் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறியதாவது:-

    டோனி ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது அவர் மந்தமாக ஆடினார் என்பதற்காக அவரின் திறமையினை விமர்சிப்பது சரியான நடைமுறை அல்ல. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் முடியவில்லை. இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தான் யார் என்பதை எம்எஸ் டோனி நிச்சயம் நிரூபிப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை (ஜூன் 27) மான்செஸ்டரில் நடைபெற உள்ள 34-வது லீக் ஆட்டத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியினை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் தரவரிசை மாற்றி கொடுக்கப்படுவதால் ரபெல் நடால் விமர்சனம் செய்துள்ளார்.
    ஸ்பெயினைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரபெல் நடால், உலகளவில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார். செம்மண் கோர்ட்டில் ஜாம்பவானாக திகழும் நடால், கிராஸ் கோர்ட்டில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது.

    டென்னிஸ் உலகத் தரவரிசையில் நடால் 2-வது இடத்தில் உள்ளார். அடுத்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைளின் தரவரிசைகள் வெளியிடப்பட், போட்டி அட்டவணை தயாராகியுள்ளது. நடாலுக்கு 3-ம் நிலை கொடுக்கப்பட்டுள்ளது. ரோஜர் பெடரருக்கு 2-ம் நிலை கொடுக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்கா ஓபன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் உலகத் தரவரிசை அடிப்படையில்தான் தரநிலை வழங்கப்படும். ஆனால், விம்பிள்டனில் மட்டும் கிராஸ் கோர்ட்டில் விளையாடியதை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கு ரபெல் நடாலுக்கு 3-வது இடமும், 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரருக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடால் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து ரபெல் நடால் கூறுகையில் ‘‘விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மட்டுமே இதுபோன்று தரநிலை ஒதுக்கப்படுகிறது. நான் 3-வது தரநிலைக்குப் பதிலாக 2-வது இடம் பிடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் எனக்கு 3-வது இடம் கொடுத்துள்ளார்கள். இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு கடுமையாக போராட வேண்டும். நான் தொடரில் வெற்றி பெறுவேன்’’ என்றார்.
    மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியை நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில், அதை எங்களால் செய்ய முடியும் என பாகிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இன்றைய போட்டியுடன் சேர்த்து மூன்று போட்டிகளிலும் வெற்றில் பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். சீதோஷ்ணநிலை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அது நம் கையில் இல்லை. முகமது அமிர் சூப்பர் பார்முக்கு வந்தது மகிழ்ச்சி. அதேபோல் மற்ற பந்து வீச்சாளர்களும் கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள்.

    பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் அணியால் எதையும் செய்ய முடியும். நாங்கள் அடிமேல் அடி வைத்து ஒவ்வொரு போட்டியாக சென்று கொண்டிருக்கிறோம். ஒரு அணியாக நாங்கள் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    பர்மிங்காம்:
      
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டி விட்டயுள்ளது. இந்நிலையில் பர்மிங்காமில் இன்று  நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். மழை காரணமாக இப்போட்டியில் டாஸ்  சுண்டுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. அரையிறுதி சுற்றுக்குள் நுழைய இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாட உள்ளனர்.

    இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:


    பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹாரிஸ் சோகைல், இமாத் வாசிம், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), வஹாப் ரியாஸ், ஷதப் கான், முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் கிரான்ட்ஹோம், சான்ட்னெர், மேட் ஹென்றி, பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 32-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியா 22.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது டேவிட் வார்னர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். 
    அடுத்து பிஞ்ச் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். கவாஜா 23 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், பிஞ்ச் சிறப்பாக விளையாடி 115 பந்தில் சதம் அடித்தார். ஆனால் சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பான தொடக்கம் மூலம் 300 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுநிலை வீரர்களான மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், ஸ்மித் 38 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 8 ரன்னிலும் வெளியேற ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 27 பந்தில் 38 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து, 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.



    தொடக்க வீரர் ஜேம்ஸ் வீன்சி முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜோ ரூட் 8 ரன்களிலும், இயன் மோர்கன் 4 ரன்களிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் எடுத்து மிச்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    இறுதியில், 44.4 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் மெஹ்ரண்டப் அதிகபட்சமாக 5  விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு தகுதி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
    ×