search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தது உள்ளது.

    இந்நிலையில், அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் அடைந்துள்ளார்.  உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டியின் போதே, தோள்பட்டை காயம்  காரணமாக பங்கேற்கவில்லை. தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் விலககி உள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    டேல் ஸ்டெயின்க்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஹென்றிக்ஸ் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது இருப்பினும் டேல் ஸ்டெயினுக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர் அணியில்  சேர்க்கப்படுவதற்கு முன்னர்,  அதிகாரப்பூர்வமாக தொழில்நுட்ப குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

    இந்நிலையில் நாளை  இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில்  டேல் ஸ்டெயின்   விளையாடதது  இந்திய அணிக்கு சாதகமக கருதப்படுகிறது.
    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மோதும் முதல் ஆட்டம் சவுத்தம்டனில் நாளை நடக்கிறது. டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
    சவுத்தம்டன்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 6 ஆட்டம் முடிந்து விட்டது. இன்று 7-வது ஆட்டம் நடக்கிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை இன்னும் ஆட்டத்தை தொடங்கவில்லை.

    இந்தியா மோதும் முதல் ஆட்டம் சவுத்தம்டனில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் வங்காளதேசத்துக்கு எதிராக திறமையை வெளிப்படுத்தினார்கள். முதல் 2 ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்காவை நம்பிக்கையுடன் சந்திக்கும்.

    வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடியதால் லோகேஷ் ராகுல் 4-வது வரிசையில் ஆடுவார்.

    இங்கிலாந்து ஆடுகளங்கள் அதிகமாக பவுன்ஸ் ஆவதால் பேட்டிங் மேன்கள் மிகவும் கவனத்துடன் விளையாட வேண்டும். தொடக்க வீரர்கள் ரோகித்சர்மா, தவான் மற்றும் விராட்கோலியின் ஆட்டத்தை பொறுத்து ரன் குவிப்பு இருக்கும். டோனி, ஹர்த்திக் பாண்ட்யாவிடம் அதிரடியான ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

    கேதர் ஜாதவ் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. அவர் விளையாடாவிட்டால் ஜடேஜா அல்லது விஜய்சங்கருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    4 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும். வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமதுசமி அல்லது புவனேஸ்வர்குமார் இடம் பெறலாம். சுழற்பந்தில் குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் தேர்வு பெறுவார்கள். 5-வது பவுலராக ஹர்த்திக் பாண்ட்யா, விஜய்சங்கர் அல்லது ஜடேஜாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ஆடுகளத்தின் தன்மையை குறித்து வீரர்கள் தேர்வு இருக்கும். பயிற்சி ஆட்டத்தில் ஜடேஜா தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

    பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலியும், பந்துவீச்சில் பும்ராவும் அணியின் துருப்பு சீட்டாக உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 104 ரன்னில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 21 ரன்னில் அதிர்ச்சிகரமாக வீழ்ந்தது.

    ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்த்து இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

    வீரர்களின் காயத்தால் அந்த அணி பலவீனப்பட்டு காணப்படுகிறது. முன்னணி பேட்ஸ்மேனான ஹசிம் அம்லா, வேகப்பந்து வீரர்களான ஸ்டெய்ன், நிகிடி ஆகியோர் காயத்தில் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த 3 பேரும் ஆட மாட்டார்கள் என தெரிகிறது.

    2 ஆட்டத்தில் தோற்றதால் தென்ஆப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் கடுமையாக போராடும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலவீனமாக காணப்படும் அந்த அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இந்த போட்டித் தொடரை பொறுத்தவரை எந்த அணி எப்போது அபாரமாக விளையாடும் என்பதை கணிக்க முடியவில்லை.

    உலக கோப்பையை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான தென்ஆப்பிரிக்கா சாதகமான நிலையிலேயே இருக்கிறது. 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா ஒரே ஒரு ஆட்டத்ல் வென்று இருக்கிறது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செஞ்சேரியனில் நடந்த போட்டியில் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (5-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    இரு அணிகளுமே முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தன. நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து இருந்தது. வங்காளதேச அணி 21 ரன்னில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

    இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது நியூசிலாந்தா? வங்காள தேசமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக அபாரமாக விளையாடியது. தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் 29.2 ஓவர்களில் 136 ரன்னில் சுருட்டி இருந்தது.

    மேலும் 137 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து முத்திரை பதித்தது.

    அந்த அணியில் குப்தில், காலின் முன்ரோ, டெய்லர், கேப்டன் வில்லியம்சன், போல்ட், ஹென்றி, பெர்குசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் நியூசிலாந்து அணி வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது போல நியூசிலாந்தையும் அதிர்ச்சிகரமாக வீழ்த்தும் வேட்கையில் வங்காளதேசம் இருக்கிறது. அந்த அணி வீரர்களின் அதிரடி நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த அணி 330 ரன் குவித்தது சிறப்பானது. பேட்டிங்கில் முஷ்பிகுர் ரகீம், முன்னாள் கேப்டன் சகீப்-அல்-ஹசன், மகமதுல்லா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முஷ்டாபிசுர், ரகுமான், சைபுதீன், சகீப்-அல்-ஹசன் ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

    இரு அணிகளுமே 2-வது வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மோசமான பீல்டிங்கினால் தான் பாதிப்பு ஏற்பட்டது என்று இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார்.
    நாட்டிங்காம்:

    உலககோப்பை போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பெற்றது.

    நாட்டிங்காமில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்தது.

    முகமது ஹபீஸ் 62 பந்தில் 84 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), பாபர் ஆசம் 63 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் சர்பிராஸ் அகமது 44 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். மொய்ன்அலி, கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மார்க்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்தது. இதனால் அந்த அணி 14 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

    ஜோரூட், பட்லர் ஆகியோர் சதம் பலன் இல்லாமல் போனது, ஜோரூட் 104 பந்தில் 107 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), பட்லர் 76 பந்தில் 103 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். வகாப் ரியாஸ் 3 விக்கெட்டும், முகமது அமீர், சதாப்கான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    48-வது ஓவரில் மொய்ன்அலி, வோக்ஸ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது அந்த அணியின் வாய்ப்பை பாதித்தது.

    இங்கிலாந்து அணி தொடர்ந்து பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ஆனால் உலககோப்பையில் தோற்றது அதிர்ச்சியானதே. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் மார்கன் கூறியதாவது:-

    இது எங்களுக்கு மோசமான நாள். காரணம் பீல்டிங் சிறப்பாக இல்லை. மோசமான பீல்டிங்கினால் தான் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பீல்டிங்கால் 15 முதல் 20 ரன்களை இழந்தோம். இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் மோசமாக தோற்று இருந்தது. வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-

    வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை 7-ந்தேதி சந்திக்கிறது. இங்கிலாந்து அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை 8-ந்தேதி எதிர்கொள்கிறது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
    கார்டிப்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 6-வது நாளான இன்று கார்டிப்பில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற  ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்கிறது.

    இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில்  தோல்வியை சந்தித்து உள்ளதால் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என எதிர்பார்க்கலாம்.

    இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:

    ஆப்கானிஸ்தான்:  முகமது ஷாசத், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி, முகமது நபி, குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், ரஷித் கான், தவ்லத் ஜட்ரன், முஜீப் ரகுமான், ஹமித் ஹசன்.

    இலங்கை: திரிமன்னே, டிமுத் கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனஞ்செயா டிசில்வா, மேத்யூஸ், ஜீவன் மென்டிஸ், திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்கா.
    காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தது உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது.

    இந்நிலையில், அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் அடைந்துள்ளார். நேற்று வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியின் போது, தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறினார்.

    தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிகிடி விளையாடமாட்டார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    இந்திய ரசிகர்கள் எளிதில் பொறுமை இழந்து விடுகின்றனர் என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    கடந்த 2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் உருவ மொம்மையை எரித்தனர். தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் போட்டு உடைத்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    இதே போல கடந்த 2003ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை சந்தித்த போது, இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

    இதனால் இம்முறை உலகக்கோப்பை தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விவி ரிச்சர்ட்ஸ் கூறுகையில், “இந்திய ரசிகர்கள் சில நேரம் தங்களின் பொறுமையை இழந்து விடுகின்றனர். உருவ மொம்மை எரிப்பு, கல் வீச்சு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். எந்த அணி வீரர்களும் இங்கு தோற்க வேண்டும் என விளையாடவில்லை. வெற்றி பெற வேண்டும் என்று தான் விளையாடுகின்றனர்” என்றார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், 348 ரன்கள் விளாசிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து வெற்றி பெற 349 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக், பகார் ஜமான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் குவித்தனர். அடுத்து இறங்கிய பாபர் ஆசம், முகமது ஹபீஸ் மற்றும் சர்பாரஸ் அகமது ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

    அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 84 ரன்களும், பாபர் ஆசம் 63 ரன்களும் குவித்தனர்

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்களை எடுத்துள்ளது.



    இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மொயீன் அலி தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.
    நாட்டிங்காம்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று, நாட்டிங்காமில் நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக இமாம் உல் ஹக்- பகார் ஜமான் களமிறங்கினர். 

    இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:

    இங்கிலாந்து

    ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்

    பாகிஸ்தான்

    ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது (கேப்டன்), சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    லண்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    பாப் டுபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே தென்ஆப்பிரிக்க அணி விக்கெட்டை கைப்பற்றினாலும், அந்த உத்வேகத்தை தொடர முடியவில்லை. பேட்டிங்கில் குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் ஆகியோர் மட்டுமே அரை சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டில் தாக்கியதில் உடனடியாக வெளியேறி விட்டு பின்னர் களம் திரும்பிய தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா 13 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அம்லா நேற்று பயிற்சி செய்ய வரவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    முந்தைய ஆட்டத்தில் நிகிடி, ரபடா, இம்ரான் தாஹிர் ஆகியோர் பந்து வீச்சில் ஓரளவு நன்றாக செயல்பட்டாலும் காயம் காரணமாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆட முடியாமல் போனது தென்ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக இருந்தது. ஸ்டெயின் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. தென்ஆப்பிரிக்க அணி வெற்றியை ருசிக்க வேண்டும் என்றால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும்.

    வங்காளதேச அணி தனது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது, அந்த ஆட்டத்தில் வங்காளதேச அணியினர், இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தினாலும் மிடில் வரிசை விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினார்கள். மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணியில் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டரான ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பயிற்சியின் போது மணிக்கட்டில் காயம் அடைந்த அதிரடி பேட்ஸ்மேன் தமிம் இக்பால் இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது சந்தேகம் தான்.



    வங்காளதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணி வலுவான அணிகளுக்கும் சில சமயங்களில் அதிர்ச்சி அளிக்கும். 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டத்தில் வங்காளதேச அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது நினைவு கூரத்தக்கது.

    லண்டனில் இன்று பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குளிர்ந்த காற்றும் வீசலாம். இத்தகைய சீதோஷ்ண நிலையில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும். எனவே இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஹசிம் அம்லா அல்லது மார்க்ராம், பாப் டுபிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பால் டுமினி, பிரிட்டோரியஸ், பெலக்வாயோ, ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

    வங்காளதேசம்: லிட்டான் தாஸ் அல்லது தமிம் இக்பால், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், முகமது மிதுன், மக்முதுல்லா, மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான், மெஹிதி ஹசன், மொசாடெக் ஹூசைன்.
    உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
    பிரிஸ்டல்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4-வது ஆட்டம் நடைப்பெற்றது.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் மற்றும் முகமது ஷாசத் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். பின் களமிறங்கிய ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி 18(34) ரன்களில் வெளியேற, நிதானமாக ஆடிய ரமத் ஷா 43(60) ரன்களில் அவுட்டானார். பின் முகமது நபி 7(22) ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஜட்ரன் மற்றும் குல்படின் நைப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

    இதில் ஓரளவு ரன் சேர்த்த குல்படின் நைப் 31(33) ரன்களில் அவுட்டாக, தனது அரைசதத்தினை பதிவு செய்த நஜிபுல்லா ஜட்ரன் அதே ஓவரில் 51(49) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தவ்லத் ஜட்ரன் 4(6) ரன்னில் அவுட்டாக, சிறிது அதிரடியாக ஆடிய ரஷித் கான் 27(11) ரன்களிலும், முஜீப் ரகுமான் 13(9) ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில் 38.2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்களும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



    பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் சார்பில், கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியில், தனது அரை சதத்தினை பூர்த்தி செய்திருந்த ஆரோன் பிஞ்ச் 66(49) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 15(20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டிவன் ஸ்மித் 18(27) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் வார்னர் 89(114) ரன்களும், மேக்ஸ்வெல் 4(1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 34.5 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்படின் நைப், ரஷித் கான், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கானிஸ்தான் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
    பிரிஸ்டல்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது.

    இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணியின் முன்கள வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளித்ததால் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. எனினும், 38.2 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 



    அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணியின் நஜிபுல்லா ஸத்ரான் 51 ரன்களும், ரஹ்மத் ஷா 43 ரன்களும் எடுத்தனர்.

    நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
    ×